states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்

அமெரிக்க ஜனாதிபதியால் கூறப்பட்டது போல், மூன்றாவது தரப்பான அமெரிக்கா நடுவராக இருந்து போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்தது என்பது உண்மையா? யாரோ ஒருவர் பொய் சொல்கிறார். அது மோடியா அல்லது டொனால்ட் டிரம்பா? இதுதொடர்பாக பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா

இந்தியா - பாகிஸ்தான் தங்கள் பிரச்சனைகளை இருதரப்பு முறையில் தீர்க்கும் முதிர்ச்சியைக் கொண்டவை. அமெரிக்காவின் தலையீடு தேவையில்லை. ஆனால் அமெரிக்கா என்ன “மத்தியஸ்தம்” செய்தது என்பதை பிரதமர் மோடி நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

சிபிஐ (எம்-எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா

இந்தியா - பாகிஸ்தானின் ஊடகங்கள் போர் வெறியைத் தூண்டி, போலி செய்திகளை பரப்பி, வெற்றி கண்டதாகக் கூறி, போரை பொழுதுபோக்காக விற்கும் நடவடிக்கை வெட்கமாக உள்ளது. இரு நாடுகளின் அரசாங்கங்களும் தங்கள் மக்களின் குரலைக் கேட்டு, அமெரிக்கத் தலையீட்டிற்கு இடம் கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும்.

உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கபில் சிபல்

இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா மத்தியஸ்தம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரையும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்ட வேண்டும். இரண்டிலும் பிரதமர் அங்கு இருப்பார் என்று உறுதியளிக்கும் வரை அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம்.