இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்திற்கு சிஐடியு வரவேற்பு
ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணி கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை யடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. குறிப்பாக மே 8ஆம் தேதி முதல் இரு நாடுகளும் எல்லைப்பகுதியில் மாறி மாறித் தாக்குதல் நடத்தின. இரு நாட்டிலும் பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள், பொதுமக் கள் என 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மே 10ஆம் தேதி மாலை இந்தியா - பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ராணுவ உயர் அதிகாரி கள் தொலைபேசி பேச்சுவார்த்தை மூலம் போர் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்தப் போர் நிறுத்த முடி வுக்கு இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு) வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த அறிவிப்பை சிஐடியு வரவேற்கிறது. போர் நிறுத்தம் செய்யப்பட்டதற்கான செய்தி யைக் கேட்டதும், இரு நாடுகளின் மக்களும் பெரும் நிம்மதியை அடைந்தனர். ஏனென்றால் இரு அண்டை நாடுகளும் தங்களின் முன்னேற் றத்திற்காக அமைதியை விரும்புகின்றன. அதே போல இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றிணைந்து பயங்கரவாதம் என்ற மனிதாபி மானமற்ற பிரச்சனையை ஒடுக்கி அழிக்கும் வகையில் பரஸ்பர நம்பிக்கையையும் ஒத்து ழைப்பையும் மீண்டும் உருவாக்க வேண்டும். இதனை சிஐடியு மிகுந்த நம்பிக்கையுடன் எதிர் பார்க்கிறது. மேலும் இரு நாடுகளின் வரலாற்று உறவுகளை புதிய உயரத்திற்கு உயர்த்த வேண்டும். இது இந்தியா - பாகிஸ்தான் மட்டு மின்றி முழு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் வழி வகுக்கும். பாகிஸ்தான் தனது நிலத்தை பயங்கர வாதிகள் தங்கள் தீய செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தாமல் உறுதி செய்ய வேண்டும். இந்தத் துணைக் கண்டம் எந்தவொரு பயங்கரவாத சதித்திட்டத்திற்கும் மைதானமாக மாறக் கூடாது. அவ்வாறான சதித்திட்டங்கள் நமது பரஸ்பர வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் அமைதியைக் குறைக்கும் என்பதால், தொழிலா ளர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் உழைக்கும் மக்களுக்கு உணர்வுபூர்வமாக வேண்டுகோள் விடுக்கிறது” என அதில் கூறப் பட்டுள்ளது.