states

img

6 மாணவர்கள் இடைநீக்கம்; அதிகாலையில் கைது

இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்

தில்லி ஒக்லா நகரில் உள்ளது ஜாமியா மிலியா இஸ்லா மியா மத்திய பல்கலைக்கழ கம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நாட்டின் மிக பழமை யான இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க கிளை தலைவ ரும் (எஸ்எப்ஐ), இந்திய மாணவர் சங்க தில்லி மாநிலக்குழு உறுப்பி னருமான சாகி மற்றும் 5 மாணவர் செயற்பாட்டாளர்களுக்கு எதி ராக பிப்ரவரி 12ஆம் தேதி நள்ளிர வில் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்க நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.

இந்நிலையில், இடைநீக்க நோட்டீஸிற்கு ஜாமியா பல்கலைக் கழக இந்திய மாணவர் சங்க கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. இதுதொடர்பாக வெளியிடப் பட்ட அறிக்கையில், “எஸ்எப்ஐ  ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் தலைவர் சாகி மற்றும் பிற ஜாமியா மாணவர் செயற்பாட்டாளர்களின் தன்னிச்சையான இடைநீக்க உத்தரவு கடும் கண்டனத்துக்குரி யது. இந்த இடைநீக்க அறிவிப்பு  என்பது ஜாமியா பல்கலைக்கழக தற்போதைய நிர்வாகத்தின் தன் னிச்சையான அடக்குமுறைக்கு ஒரு சான்றாகும். குறிப்பாக பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மாணவர்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது.

2022 முதலே...

மாணவர்களின் குரலை ஒடுக்க ஜாமியா பல்கலைக்கழக நிர்வாகம் 2022ஆம் ஆண்டே துவங்கியது. 2022 ஆகஸ்ட் 29ஆம் தேதி ஜாமியா நிர்வாகம் வளாகத் தில் 5-க்கும் மேற்பட்ட மாணவர் கள் கூடுவதற்கு முன் அனுமதி தேவை என்று கூறி நோட்டீஸ் வெளியிட்டது. அதாவது கல்லூரி வளாகத்தில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அடக்குமுறை மற்றும் அநீதிக்கு எதிராக போராட் டம் நடத்தாத வகையில் 144 தடை உத்தரவுக்கு இணையான கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த  நோட்டீஸ் வெளியிடப்பட்டதி லிருந்து பல்கலைக்கழகத்தில் சுத்த மான உணவு, தூய்மையான நீர், சரியான கழிப்பறைகள் அல்லது விடுதி வசதிகள் போன்ற அடிப்ப டைத் தேவைகளுக்காக எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களின் குரல் கள் ஒடுக்கப்பட்டன. அதே போல  புத்தக விவாதங்கள், பேச்சுப் போட்டிகள், வினாடி வினாக்கள், விவாதங்கள் மற்றும் கவிதை வாசிப்பு, பாட்டுப் பாடுதல் போன்ற மாணவர் ஈடுபாடுகளையும் ஒடுக்கும் வகையில் விதிகள்  கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த தன்னிச்சையான அடக்குமுறை மூலம் ஜாமியா நிர்வாகம் மாணவர் செயல்பாட்டை கட்டுப்படுத்துவ தற்கு இதுபோன்ற விதிகளை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை தெளிவாக்குகிறது.

போலிக் குற்றச்சாட்டுகள்...

2022இல் வெளியிடப்பட்ட அடக்குமுறை நோட்டீஸ் போல, தற்போது சாகிக்கு இடைநீக்கம் கடிதம் மூலம் மாணவர்களின் செயல்பாட்டை முடக்க திட்ட மிட்டுள்ளது. இடைநீக்க காரணம் என்ற பெயரில் ஆசிரியர்களின் அறிவுறுத்தல்களை மீறுதல், பல்கலைக்கழகத்தின் சொத்து/ உபகரணங்களை சேதப்படுத்து தல், மாணவருக்கு பொருத்தமற்ற தாக கருதப்படும் செயல்பாடு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை சாகி மீது முன்வைக்கிறது ஜாமியா நிர்வாகம். இதுபோன்ற குற்றச் சாட்டையும் விதியையும் நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். கார ணம் குற்றச்சாட்டு தொடர்பாக நிர் வாகத்திடம் எந்த ஆதாரமும் இல்லை” என அதில் கூறப்பட்டுள்ளது.

ஏபிவிபி குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன்?

“ஆசிரியர்களின் அறிவுறுத்தல்களை மீறியதாக சாகி மீது இடைநீக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஜாமியா பல்கலை க்கழக நிர்வாகம். ஆனால்  சில மாதங்களுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மாணவர் பிரிவான ஏபிவிபி குண்டர்கள் ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியர்களின் அதிகாரத்தை முற்றிலும் புறக்கணித்து, வளாகத்தில் உள்ள மாணவர்களை துஷ்பிர யோகம் செய்தனர். ஆனால் ஏபிவிபி குண்டர்கள் மீது ஜாமியா நிர்வா கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுக்கு மட்டும்  விதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதா?” என ஜாமியா மிலியா பல்கலைக் கழக இந்திய மாணவர் சங்க கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கல்காஜியில் மாணவர்கள் போராட்டம்

நள்ளிரவு 1 மணிக்கு ஜாமியா பல்கலைக்கழக நிர்வாகம் 6  பேருக்கு இடைநீக்க நோட்டீஸ் அளித்தது. தொடர்ந்து வியாழக் கிழமை அதிகாலை 5 மணிக்கு தில்லி காவல்துறை அடாவடி யாக ஜாமியா பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து பல மாணவர்களை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் எங்கே இருக்கிறார் கள் என்று தெரியவில்லை. அவர்களை தொலைபேசிகள் மூலம் அணுக முடியாத நிலையில் இருந்தன. இதனால் காலை 7 மணி முதல் இந்திய மாணவர் சங்கத்தினர் கல்காஜி காவல்நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள் ளது. தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்களில் இடை நீக்க நோட்டீஸ் பெற்ற 6 பேரும் உண்டு என்றும் தகவல் வெளியாகி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.