states

img

உ.பி.யில் பாஜக-வுக்கு 80 இடங்கள் குறையும்..!

லக்கிம்பூர் சம்பவத்தால் மட்டும் 20 தொகுதிகள் பறிபோனது!

ஏபிபி - சிவோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல்

லக்னோ, அக்.13- உத்தரப் பிரதேச சட்டப்பேர வைக்கு 2022-இல் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், ஏபிபி - சிவோட் டர் நிறுவனங்கள் இணைந்து, குறிப் பிட்ட இடைவெளியில் கருத்துக் கணிப்பு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், லக்கிம்பூர் கெரி படுகொலைக்கு முன்பு நடந்த கருத்துக் கணிப்பில் கிடைத்த இடங்க ளைக் காட்டிலும், படுகொலைக்கு பின்னர் நடந்த கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 20 இடங்கள் குறைந்தி ருப்பது தெரியவந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மொத்த முள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில், கடந்த 2017-இல் தேர்தலில் 325 தொகுதி களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றி ருந்தது. 41.4 சதவிகிதம் அளவிற் கான வாக்குகளையும் பாஜக பெற்றி ருந்தது. இந்நிலையில், 2022-இல் நடை பெறும் தேர்தலில் பாஜக-வுக்கு 41.8 சத விகிதம் வாக்குகள் கிடைத்தாலும், சுமார் 60 இடங்கள் வரை குறையும்.. 259 முதல் 267 இடங்கள் வரையே கிடைக்கும் என ஏபிபி-சிவோட்டர் நிறு வனங்கள், கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் கூறி யிருந்தன.

இதனிடையே, சமீபத்தில் நடத்தப் பட்ட ஏபிபி - சிவோட்டர் கருத்துக் கணிப்பில், பாஜக-விற்கு கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கை 241 முதல் 249 ஆக குறைந்துள்ளது. லக்கிம்பூர் கெரியில், ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா விவசாயிகள் 4 பேரை காரை ஏற்றி படுகொலை செய்த சம்ப வத்திற்குப் பிறகு 20 இடங்களை இழந்திருப்பதாக ஏபிபி - சிவோட்டர் தெரிவித்துள்ளது. 2017 தேர்தலில் கிடைத்ததை விட 2022-இல் பாஜகவுக்கான வாக்கு சதவிகிதம் 41.4 சதவிகிதத்திலிருந்து 41.8 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் கூறப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் அது 0.5 சதவிகிதம் குறைந்துள்ளது. தற்போது பாஜகவுக்கு 41.3% வாக்கு கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள் ளது.

லக்கிம்பூர் கெரி படுகொலைக்குப் பிந்தைய கணிப்பில் பாஜக 20 தொகு திகளை இழக்கும் நிலையில், அந்த 20 தொகுதிகளை சமாஜ்வாதி கைப் பற்றும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் சமாஜ்வாதிக்கு 130 முதல் 138 இடங்கள் வரை கிடைக் கும். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு முன்பை விடக் குறைவாக 15 முதல் 19 இடங்களும், காங்கிர ஸூக்கு 3 முதல் 7 வரை இடங்களும் கிடைக்கும் என்று ஏபிபி - சிவோட்டர் கணித்துள்ளது. லக்கிம்பூர் கெரி படுகொலை விஷயத்தில், ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் மீதான குற்றச் சாட்டு உண்மையென 61 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 39 சதவிகிதத்தினர் மட்டுமே இல்லை என்று கூறியுள்ளனர். பொதுவாக லக் கிம்பூர் சம்பவத்தால் பாஜகவிற்கு இழப்பு ஏற்படும் என்றும் 70 சதவிகி தம் பேர் கூறியுள்ளனர்.