வெள்ளி, பிப்ரவரி 26, 2021

states

img

ராஜஸ்தான் சாலைவிபத்தில் சிக்கி 8 பேர் பலி

ராஜஸ்தானில் டிரக் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ராஜஸ்தான் மாநிலம் டோங்க்  பகுதியில் இன்று அதிகாலை டிரக் மீது வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
விபத்துக்குள்ளான இரண்டு வாகனத்தின் டிரைவர்களும் தப்பி ஓடிவிட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பனிமூட்டம அதிகமாக இருந்ததே விபத்துக்கு காரணம் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது

;