states

img

மேற்குவங்க தேர்தல்: பாஜக திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் - 4 பேர் துப்பாக்கி சூட்டில் பலி

மேற்கு வங்கத்தில் சட்ட பேரவை தேர்தல் நடந்து வரும் சூழலில் பாஜக  திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் நடந்த சூழலில் சிஆர்பிஎப் வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 4-ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று கட்டங்களாக 91 தொகுதிகளில் சட்டசபை வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இன்று நான்காம் கட்டமாக 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஹவுரா, தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி, அலிபுரத்துவார், கூச் பெஹார் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. 
இந்நிலையில் கூச் பெஹார் பதற்றமான மாவட்டமாக கருதப்பட்டதால் அங்கு மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், அங்கு பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், சிஐஎஸ்எப் படையினர் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இதில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
இந்நிலையில்  சிதால் குர்ச்சி தொகுதியில் வாக்குச் சாவடி 125ல் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணைம்  அறிவித்துள்ளது.