மேற்கு வங்க சட்ட மன்ற தேர்தலுக்கான 5 கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 135 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள
159 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 5-ம் கட்ட தேர்தலில் 39 பெண்கள் உள்பட 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் 5-ம் கட்ட தேர்தலுக்காக 15,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு கொரோனா கட்டுப்பாடுகளுடன் காலை 7 மணிக்கு தொடங்கியது.
பிதானகர் பகுதியில் திரிணாமுல் மற்றும் பாஜக ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பல பெண்கள் காயமடைந்தனர்.
கமர்ஹாட்டியில் வாக்கு சாவடி எண் 107 இல் பாஜக வாக்குப்பதிவு முகவர் ஒருவர் திடீரென மரணம் அடைந்தார். இது குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது. இந்நிலையில் காலை 9:32 மணி வரை 16.15 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.மேலும் காலை 11 மணி நிலவரப்படி 21.26% வாக்குகள் பதிவாகி உள்ளது.