மும்பை, அக்.13- ‘பிஎம் கேர்ஸ்’ நிதியத்திற் கான இணையதளத்தில் பிரதம ரின் பெயர், புகைப்படம், தேசியக் கொடி, தேசிய சின்னங்கள் இடம் பெற்றிருப்பது தொடர்பாக ஒன் றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி விக்ரந்த் சவான், மும்பை உயர் நீதி மன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந் தார். அதில், “கொரோனா தொற்றுப் பரவலின்போது, சுகாதார அவ சர தேவைகளுக்காகவும், பொது மக்களின் மருத்துவ நல திட்டங் களுக்காகவும் ‘பிஎம் கேர்ஸ் நிதி யம்’ என்ற அறக்கட்டளையை பிர தமர் நரேந்திர மோடி துவக்கினார். ஆனால், ‘பிஎம் கேர்ஸ் நிதியம்’ அரசாங்கத்திற்குச் சொந்தமா னது அல்ல. இது ஒரு பொதுத் தொண்டு அறக்கட்டளை மற்றும் அரசு சாரா நிறுவனம் ஆகும். தாமாக முன்வந்து அளிக்கும் தனிநபர், நிறுவனங்களின் நன்கொடையை மட்டுமே ‘பிஎம் கேர்ஸ் நிதியம்’ பெறுகிறது.
நன்கொடை அளிக் கப்படும் தொகைக்கு, 100 சத விகிதம் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிதி தனிப்பட்ட முறையில் செயல்படு கிறது. இது இந்திய அரசின் ஒருங் கிணைந்த நிதிக்குச் செல்லாது. ஒன்றிய அரசுக்கும், இதற்கும் எந்த விதத் தொடர்புமில்லை” என ஒன் றிய அரசே தெரிவித்துள்ளது. அவ்வாறு இருக்கையில், பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கான அறக் கட்டளை இணையதளத்தில் பிர தமரின் பெயர், அவரது படம், தேசியக் கொடி, தேசியச் சின்னம் ஆகியவற்றின் வடிவங்கள் இடம் பெற்றிருப்பது, அரசியல் சட்டத்தை மீறிய செயலாகும். எனவே, பிஎம் கேர்ஸ் இணைய தளத்தில் இருந்து பிரதமரின் பெயர், படம், தேசியக் கொடி, தேசியச் சின்னம் ஆகியவற்றை உடனடி யாக நீக்க உத்தரவிட வேண்டும்” என்று விக்ரந்த் சவான் வலி யுறுத்தி இருந்தார். இந்த மனு, மும்பை உயர் நீதி மன்றத்தில் நீதிபதிகள் ஏ.ஏ. சையத், எஸ்.ஜி. டிகே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ் வாயன்று விசாரணைக்கு வந் தது. அப்போது, மனுவை விசார ணைக்கு ஏற்ற நீதிபதிகள், இது குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் கிற்கு உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள் ளனர்.