மும்பை ஜூலை 2 மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் பாஜக தனது ஆள்தூக்கும் அரசி யலை அரங்கேற்றியுள்ளது. சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த அஜித் பவார் கட்சியை உடைத்து பா.ஜ.க-சிவசேனா (ஷிண்டே) அமைச்சரவையில் இணைந்து உள்ளார். ஞாயிறு மதியம் 2.20 மணிக்கு அஜித் பவார் தலைமையில் 40 எம்.எல்.ஏ க்கள் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் ரமேஷ் பாயிஸை சந்தித்து பதவி ஏற்ற னர். துணை முதல்வராக பதவி பெற்ற பிறகு பேட்டியளித்த அஜித் பவார், ``பிரதமர் நரேந்திர மோடி தலைமை யில் நாடு நன்றாக முன்னேறுவதாக வும், அவரையும், அவரது தலைமை யையும் அனைவரும் ஆதரிக்கின்றனர் எனவும், வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து போட்டியிடு வோம். அதற்காகத்தான் இப்போது இந்த முடிவை எடுத்து முழு தேசிய வாத காங்கிரஸ் கட்சியாக இணைத் திருக்கிறோம், நாங்கள் தேசியவாத காங்கிரஸ் சின்னத்தை பயன்படுத்து வோம் என்றும் அவர் கூறினார். முன்னதாக இவ்வார துவக்கத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இதன் பின்னணியிலேயே, ஞாயி றன்று ராஜ்பவனுக்குச் சென்று மாநில ஆளுநர் ரமேஷ் பாயிஸை சந்தித்து, துணை முதல்வராக பதவியேற்றுள் ளார்.
தேசியவாத காங்கிரசை உடைத்த அஜித் பவார் மற்றும் அவருடன் அமைச்சர் பதவி பெற்றுள்ள சகான் புஜ்பால், அனில் பாட்டில், ஹசன் முஷ்ரிப் உள்ளிட்டோர் மீது கடந்த காலத்தில் பாஜகவால் அமலாக்கத் துறை விசாரணை ஏவப்பட்டிருந்தது, குறிப்பாக ஹசன் முஷ்ரிப் பண மோசடி வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டு பின் மும்பை உயர்நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெற்றவர். அஜித் பவாரும் கட்சி தாவல்களும் மகாராஷ்டிராவில் 2010-2014 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணி அரசில் இருமுறை துணை முதலமைச்சராக இருந்துள்ளார். 2019இல் மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்து துணை முத லமைச்சராக பதவியேற்றார். பின்னர் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து துணை முதல்வரானார். தற்போது மீண்டும் கட்சியை உடைத்து பாஜகவுடன் இணைந்து துணை முதல்வராகி யுள்ளார். பாஜகவால் சிறைக்கு அனுப்பப் பட இருந்த நபர் தற்போது அவர்களது ஆட்சியில் துணை முதல்வராகி யுள்ளார் என சிவசேனா (யுடிபி) தலை வர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சிவசேனாவை இரண்டாக உடைத்து ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கி மஹராஷ்டிராவில் ஆட்சி செய்யும் பாஜக எதிர்வரும் மக்களவை தேர்த லில் அதிக எம்பி க்களை பெறு வதற்காக எதிர்கட்சிகளை உடைக்கும் வேலையை செய்து வருகிறது.