நாடு முழுவதும் 7 கட்டங்க ளாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர் தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4 அன்று நடைபெற்றது. தேர் தல் முடிவில் பாஜக பெரும் பான்மை இழந்த நிலையில், கூட்ட ணிக் கட்சிகளின் தயவோடு மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
வாக்குப்பதிவு, வாக்கு எண் ணிக்கை, புதிய ஆட்சி பதவியேற்பு என அனைத்து சம்பவங்களும் நிறைவு பெற்ற நிலையில், மொத்த முள்ள 543 தொகுதிகளில் 140க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வெற்றி குறித்தும், இவிஎம் வாக்குப் பதிவு இயந்திரம் குறித்தும் பல் வேறு சந்தேகம் கிளம்பியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் பூனம் அகர் வால் உள்ளிட்ட பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மும்பை வட மேற்கு தொகுதியில் பாஜக கூட்ட ணிக் கட்சியின் சிவசேனா வேட்பா ளரின் வெற்றி குறித்தும், இவிஎம் வாக்குப்பதிவு இயந்திர முறை கேடு குறித்தும் ஆதாரத்துடன் பல் வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளி யாகியுள்ளன.
தேர்தல் பணியாளர் மூலமாகவே முறைகேடு
நாட்டிலேயே மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற ‘பெருமைக்குரிய வர்’ பாஜக கூட்டணிக் கட்சியான சிவசேனாவின் (ஷிண்டே) ரவீந்திர வெய்க்கர் ஆவார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வடமேற்கு தொகு தியில் வெற்றி பெற்ற ரவீந்திர வெய்க்கர், இந்தியா கூட்டணி கட்சி யான சிவசேனா (உத்தவ்) வேட்பா ளரான அமோல் கஜனன் கீர்த்திகரி டம் இருந்து வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் தப்பிப் பிழைத் தார்.
வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்ட ரவீந்திர வெய்க்கர் இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை முடிவில் 4,51,094 வாக்குகள் பெற்றார். இரண்டாம் இடம் பிடித்த அமோல் கஜனன் கீர்த்திகர் 4,51,095 பெற்ற நிலை யில், இருவருக்கும் வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசம் மட்டுமே இருந்தது. அமோல் கஜனன் கீர்த்தி கர் ஒரு வாக்குடன் முன்னிலை பெற்ற நிலையில், கடைசியாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்கு எண்ணிக்கை முடி வில் அமோல் கஜனன் கீர்த்திகர் 1,501 வாக்குகளும், ரவீந்திர வெய்க் கர் 1,550 வாக்குகளும் பெற்றார். அதாவது கீர்த்திகரை விட வெய்க்கர் 49 வாக்குகள் கூடுதலாக பெற்ற நிலையில், 48 வாக்குகள் வித்தியாசத்தில் சிவசேனாவின் (ஷிண்டே) ரவீந்திர வெய்க்கர் வெற்றி பெற்றதாக அறிவித்தது தேர்தல் ஆணையம்.
ஓடிபி எண் மூலம் மோசடி
ரவீந்திர வெய்க்கரின் வெற்றி குறித்து மூத்த பத்திரிகையாளர் பூனம் அகர்வால் ஆதாரத்துடன் சந்தேகம் எழுப்பிய நிலையில், தற்பொழுது இதற்கான ஆதா ரங்கள் கசிந்துள்ளது. எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் தங்க ளது வாக்குகளை பதிவு செய்ய மின்னணு வாக்குப்பதிவு முறை உள்ளது. இந்த வசதிக்கு இ.டி.டிபி.பி.எஸ் என்று பெயர். இ.டி.டிபி. பி.எஸ் என்றால் தொலைதூரத்தி லேயே இருந்து மின்னணு மூலம் வாக்குப்பதிவு செய்யும் முறையா கும். இந்த இ.டி.டிபி.பி.எஸ் முறை யில் பதிவான வாக்குகளை, மின் னணு முறையிலேயே இவிஎம் இயந்திரத்திற்கு அனுப்ப வசதி உள்ளது. அதாவது மின்னணு முறையிலான தபால் வாக்குகளை பெற வேண்டுமானால் இவிஎம் வாக்கு இயந்திரத்தை திறக்க வேண்டும். இவிஎம் வாக்கு இயந்திரத்தை திறக்க ஒடிபி எண் (OTP) அவசியம் என்ற நிலையில், இந்த ஒடிபி எண் பெறும் வசதி ரவீந்திர வெய்க்கரின் உறவினரான மங்கேஷ் பண்டில்கரின் செல்போ னில் கிடைத்துள்ளது. இதற்கு தேர்தல் ஆணைய பணியாளர் தினேஷ் ராவ் உதவி செய்துள்ளார். ரவீந்திர வெய்க்கரின் உறவினரான மங்கேஷ் பண்டில்கரின் கையில் ஒடிபி எண்கள் கிடைத்துள்ளது. அதன் மூலம் மின்னணு தபால் வாக்குகளில் முறைகேடு செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இந்த முறைகேடு மூல மாகவே ரவீந்திர வெய்க்கர் வெற்றி பெற்றுள்ளார் என்ற பரபரப்புக் குற் றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியா கூட்டணி வேட்பாளர் புகார்
இந்நிலையில், ரவீந்திர வெய்க் கரின் வெற்றியில் சந்தேகம் இருப்ப தாகவும், பெரியளவு முறைகேடு சம்பவம் நடந்துள்ளதாகவும் இந் தியா கூட்டணியில் அங்கம் வகிக் கும் சிவசேனா (உத்தவ்) வேட்பாள ரான அமோல் கஜனன் கீர்த்திகர் உள்ளிட்ட 3 பேர் அளித்த புகாரின் பேரில் மும்பை போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
முதற்கட்டமாக முறைகேடு நடந்ததாக கூறப்படும் நெஸ்கோ வாக்குச்சாவடியில் சிசிடிவி ஆதா ரங்கள் மூலம் மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். ஒடிபி மூலம் முறைகேடு நடந்ததாக கூறப்படுவதால் ரவீந்திர வெய்க்கரின் உறவினரான மங் கேஷ் பண்டில்கர் மற்றும் தேர்தல் ஆணைய பணியாளர் தினேஷ் ராவ் ஆகியோரை விசாரிக்க மும்பை போலீசார் திட்டமிட்டுள்ள னர். விசாரணைக்கு ஒத்துழைக்கா விட்டால் இருவரை கைது செய்ய வும் மும்பை போலீசார் திட்டமிட் டுள்ளதாகவும் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக வெற்றி - இவிஎம் இயந்தி ரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சை கள், சந்தேகங்கள் கிளம்பி வரும் நிலையில், மும்பை வடமேற்கு தொகுதியில் உள்ள இவிஎம் இயந்திரத்தில் முறைகேடு சம்பவம் அரங்கேறியுள்ளதாக ஆதாரத்து டன் தகவல் கசிந்துள்ள சம்பவத் திற்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரு கின்றன.