states

img

அமித்ஷாவின் கான்வாய் செல்வதற்காக தடுத்து நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்!

மும்பை, செப்.7- மகாராஷ்டிராவில், ஒன்றிய  உள்துறை அமைச்சர் அமித்ஷா வின் கான்வாய் செல்வதற்காக, ஆம்புலன்ஸை நீண்டநேரம் காக்க வைத்த சம்பவம் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத் தலைநக ரான மும்பையில், விரைவில் மாநக ராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு செல்வாக்கு மிக்க இந்த மாநகராட்சியில், இம்முறை பாஜக வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு போட்டுள்ளார். இதற்காக மும்பைக்கே வந்து  பாஜக தலைவர்களுக்கு ஆலோச னைகளை வழங்கினார். முதலில் லால்பாக்ராஜா மண்டலில் சாமி  தரிசனம் செய்த அவர், மலபார்ஹில் பகுதியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவே ந்திர பட்னாவிஸ் வீடுகளுக்கு சென்று ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில்தான் அமித்ஷா வின் மும்பை வருகையின்போது, அந் தேரியில் பாதுகாப்பு காரணங் களுக்காக பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகவும், அப்போது, ஆம்புலன்ஸையும் கூட அதிகாரி கள் அனுமதிக்க மறுத்துவிட்ட தாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களுடன் ஆம்புலன்ஸ் ஒன்று நீண்டநேரமாக காத்திருக்கும் சாலையில் காவல்துறை வாகனங்கள் வேக மாக செல்லும் வீடியோ ஆதா ரங்கள் இணையதளங்களில் வெளி யாகியுள்ளன. இந்த சம்பவத்திற்கு பலரும்  தற்போது கண்டனம் தெரிவித்து வரு கின்றனர். பாஜக - ஷிண்டே கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர்தான் இது போன்று நடக்கிறது. இதற்கு முன்பு  மும்பையில் இதுபோன்ற சம்பவங் களை நினைத்துப் பார்க்க முடியாது என்று அரசியல் கட்சிகள் கூறி யுள்ளன. “அமித்ஷாவின் கான்வாய் செல்ல ஆம்புலன்ஸ் காத்திருக் கிறது. அமித்ஷாவுக்கு இசட் ப்ளஸ்  பாதுகாப்பு தான். விஐபி, விவிஐபி பாதுகாப்பு அல்ல. ஆனால் பாஜக  ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக அவருக்காக போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது’’ என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே விமர்சனம் செய்துள்ளார்.

;