states

img

சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் எதிரொலி

மகாராஷ்டிரா மாநிலம் பத்லாபூரில் உள்ள மழலையர் பள்ளியில் படிக்கும் 4 வயது நிரம்பிய 2 சிறுமிகளை, அதே பள்ளியில் பணிபுரி யும் பணியாளர் பாலி யல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது. இதை அறிந்த சிறுமிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் செவ்வாயன்று பத்லாபூரில் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து புதனன்று பாலியல் தொல்லை நடைபெற்ற மழலையர் பள்ளி யை பொதுமக்கள் சூறையாடினர். இந்த  வன்முறை காரணமாக பத்லாபூரில் பதற் றம் நீடிப்பதால் 144 தடை விதிக்கப் பட்டு இணைய சேவை துண்டிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளி மாணவிக ளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல் லையை தடுக்கும் விதமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிசிடிவி கேமராவை பொருத்த மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர் பான அறிக்கையில்,”பள்ளி வளாகத்தில் பொருத்தமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட வேண்டும். இந்த உத்தரவை பின்பற்ற தவறினால் நிதி மானியங்கள் நிறுத்தப்படும் ; பள்ளியின் செயல்பாட்டு அனுமதி ரத்து செய்யப்படும் என்பன போன்ற நட வடிக்கைகள் எடுக்கப்படும்” என மகாராஷ்டிரா  அரசு எச்சரித்துள்ளது.

நாளை முழுஅடைப்பு

பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா வில் குழந்தைகளுக்கு எதிரான குற் றங்கள் மறைக்கப்படுவதாக கூறி எதிர்க் கட்சிகளின் கூட்டணியான எம்விஏ கூட்ட ணிக் கட்சிகள் (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்) சிவசேனா (உத்தவ்), மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.