பெங்களூருவில் கனமழை பெய்து வரும் நிலையில் சித்தாபுராவில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவில் நேற்று இரவு கனமழை கெட்டியது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலைகளில் வாகனங்கள் நீரில் மூழ்கி உள்ளன.
இந்நிலையில் சித்தபுராவில் திங்களன்று இரவு அகிலா (23), என்ற பெண் வீடு திரும்பி கொண்டிருந்த போது வாகனம் பழுதடைந்தது. இதையடுத்து பெங்களூருவின் வைட் பீல்ட் பகுதியில், வெள்ளத்தில் இருசக்கர வாகனத்தை தள்ளிச் சென்ற அகிலா மின் கம்பத்தில் கை வைத்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். வெள்ளத்தில் சென்ற போது நிலை தடுமாறியதை அடுத்து அகிலா மின் கம்பத்தை பிடித்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.