states

img

வெற்றிக் கொண்டாட்டமாம்! பொது இடத்தில் மதுபான விருந்து வைத்த பாஜக எம்.பி.

நடந்து முடிந்த 18ஆவது மக்க ளவைத் தேர்தலில் கர்நாட காவின் சிக்கபல்லபூர் தொகுதி யில் பாஜக சார்பில் களமிறங்கிய சுதா கர் வெற்றி பெற்று எம்.பி.யானார்.

இந்நிலையில், தனக்காக தேர்தல் பணியாற்றிய பாஜக மற்றும் ஜேடி எஸ் கட்சியினருக்கு ஞாயிறன்று நெல மங்கலாவில் பாஜக எம்.பி. சுதாகர் விருந்தளித்தார். அசைவ உணவுடன் நடத்தப்பட்ட இந்த விருந்தில் பாஜக - ஜேடிஎஸ் தொண்டர்களை வரி சையாக நிற்க வைத்து மதுபாட்டில் கள் வழங்கப்பட்டது. இந்த மது பான விருந்திற்கு பல்லாயிரக்க ணக்கானோர் திரண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பாஜகவைச் சேர்ந்த கர்நாடக எதிர்க்கட்சி தலை வர் அசோக், முன்னாள் எம்எல்ஏ நாகராஜ் மற்றும் ஜேடிஎஸ் எம்எல்சி ஒருவரும் இந்த மதுபான விருந்தில் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கண்டனம்

பாஜக எம்.பி. மதுபானம் விநியோ கம் செய்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலை யில், இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகை யில்,”பாஜகவினர் பேசுவது ஒன்றாக வும், அவர்களது செயல்பாடு ஒரு வித மாகவும் உள்ளது. கர்நாடகாவில் டெங்கு பரவி வரும் நிலையில், பாஜ கவினர் மதுபானம் விநியோகிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இது கண்டத்துக்குரியது” என அவர் கூறினார்.