பெங்களூரு;
கர்நாடக மாநில பாஜகஅரசு, கடந்த புதன்கிழமையன்று பசுவதைத்தடுப்புமற்றும் கால்நடை பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
வணிக ஆலோசனைக் குழுகூட்டத்தில் இந்த மசோதா (Bill)விவாதிக்கப்படவில்லை; நிகழ்ச்சி நிரலிலும் குறிப்பிடப்படவில்லை; இது அரசியலமைப்புக்குஎதிரான நடவடிக்கை என்று காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதளம்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் எடியூரப்பா அரசு,தாங்கள் நினைத்தபடி பசுவதைத் தடைச் சட்டத்தை நிறைவேற்றி முடித்தது. இப்புதிய சட்டத்தின்படி, பசு, எருது, கன்று, 13 வயதுக்கு குறைவான எருமை ஆகியவற்றை கொலை செய்வோருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் வரைஅபராதமும் விதிக்கப்படும். இதுவே தொடர்ந்து பசுவதையில் ஈடுபட்டால்,அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.முன்னதாக அமைச்சர் பிரபு சாவன், அரசு சட்டப்பேரவை வளாகத்திற்குள் பசுமாட்டைக் கொண்டுவந்து, அதற்கு பூஜை, புனஸ்காரங்களை செய்து வழிபாடு நடத்தினார்.