states

img

குடியரசுத் தலைவரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி கைது 

மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் தில்லியில் விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில்  2 கோடி கையொப்பம் பெறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து  குடியரசுத் தலைவரிடம் விவசாயிகள் போராட்டத்தில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும்  என வலியுறுத்தி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் சென்றனர்.  ஆனால் காவல்துறையினர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை தடுத்து கைது செய்தனர். 
அதேசமயம், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட சிலர் மட்டும் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.