states

img

சுற்றுலா தினத்தையொட்டி மினி மாரத்தான் போட்டி

புதுச்சேரி, செப். 27- உலக சுற்றுலா தினத்தையொட்டி புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகம் இந்திய சுற்றுலாத்துறை தெற்கு பிராந்தியத்துடன் இணைந்து செவ்வாயன்று (செப். 27) புதுவை கடற்கரைச் சாலையில் மினி மராத்தான் போட்டியை நடத்தியது. புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம் அருகில் தொடங்கி நகரைச் சுற்றி 4 கி.மீ. தூரம் வரை இப்போட்டி நடைபெற்றது. 255 தன்னார்வலர்கள் இதில் பங்கேற்றனர். இப்போட்டியினை, புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது இந்திய சுற்றுலாத் துறை தெற்கு பிராந்திய இயக்குநர்முகமது பாரூக் உடனிருந்தார்.