புதுதில்லி, மே 25- பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்த பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவ ருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். எனினும், ஒன்றிய பாஜக அரசு பிரிஜ் பூஷனைக் காப்பாற்றி வருகிறது. எனவே, பிரிஜ் பூஷனைக் கைது செய்யக் கோரி, மே 28 அன்று புதிய நாடாளுமன்றம் முன்பு ‘மகா பஞ்சாயத்தைக் கூட்டி, முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் அறி வித்துள்ளனர். பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனை களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து வருவதாகவும், குறைந் தது 10 முதல் 12 வீராங்கனை களுக்கும் அதிகமானோர், இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாக வும் குற்றம்சாட்டி, பெண் மல் யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடு பட்டனர். பிரிஜ் பூஷனால் தேசிய பயிற்சி முகாம்களில் நிய மிக்கப்பட்ட சில பயிற்சியாளர் களும், பல ஆண்டுகளாகப் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வருவதாக அவர்கள் கூறினர். நாட்டிற்காக ஒலிம்பிக் பதக் கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் போன்றவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலை மையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்த ஒன்றிய அரசு, அத னைக் காட்டி, போராட்டத்தை கை விடச் செய்தது. ஆனால், 3 மாதங் கள் ஆகியும் மேரி கோம் குழு வினர் அளித்த அறிக்கையை வெளியிடாததுடன், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது சட்ட ரீதியான நட வடிக்கையும் எடுக்காததால், மீண்டும் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். ஒருமுறை உச்ச நீதி மன்றத்தையும் அவர்கள் நாடினர். அப்போதைக்கு பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்த மோடி அரசு, அதனைக் காட்டி உச்ச நீதி மன்றத்தில் தப்பித்துக் கொண் டது. பிரிஜ் பூஷன் மீது புகார் கொடுத்த 7 வீராங்கனைகளிடம் போலீசார் வாக்குமூலம் பெற்ற னர். அதில், ”2016, 2018-ஆம் ஆண்டு போட்டிகளின் போது பிரிஜ் பூஷன் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்” என வீராங்கனைகள் கூறினர். ஆனாலும் இப்போது வரை அவ ரைக் கைது செய்யவில்லை. இத னால், மல்யுத்த வீரர் - வீராங்கனை களின் போராட்டமும் தொடர் கிறது. இவர்களுக்கு காங்கி ரஸ், இடதுசாரிகள், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சி களின் தலைவர்கள் நேரில் சென்று ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிரிஜ் பூஷ னைக் கைது செய்யக் கோரி, தில்லியில் பேரணி நடத்திய மல் யுத்த வீரர் - வீராங்கனைகள், இந் தியா கேட் பகுதியில் அதனை நிறைவு செய்தனர். ஒலிம்பிக் பதக் கம் வென்ற பஜ்ரங் பூனியா அங்கு உரையாற்றினார். அப்போது, “பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை கோரி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், இது வரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வெட்கக்கேடானது. அவரை கைது செய்ய வலி யுறுத்தி வரும் 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற வாயில் முன்பு பெண்கள், இளைஞர்கள் உள் ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் மஹா பஞ்சாயத்து முற்றுகை போராட்டம் நடை பெறும்” என்று அறிவித்தார்.