states

img

‘முதலாளிகள் இல்லாத உலகத்தில் தொழிலாளர்கள்’

கோவை, நவ.25- சங்கமாக திரண்டு போராடும் போது தான், தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை பெற முடியும் என சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் தெரிவித்தார். சிஐடியு டாஸ்மாக் குடோன் சுமைப் பணி தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின், கோவை மண்டல 3 ஆவது மாநாடு, கோவை மாவட்டம், பொள்ளாச்சி – பாலக்காடு சாலையிலுள்ள ஜிடிஎஸ் திருமண மண்டபத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது.  இம்மாநாட்டில் சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் பேசியதாவது: டாஸ்மாக் கார்ப்பரேஷனில் பணி யாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் கள் தற்போது வரை டாஸ்மாக் தொழி லாளியாகக்கூட அறிவிக்கப்படவில்லை. இறக்கு கூலி முறைப்படுத்தப்பட்டதை போல, ஏற்று கூலியும் முறைப்படுத்தப்பட வேண்டும். ஒப்பந்த முறை வழியாக சுமைப் பணியாளர்களை வேலை வாங்குவது, அதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் நியாயங்களை மறுப்பது அநியாயம். இதை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும். நீண்ட காலமாக டாஸ்மாக்கில் பணியாற்றுபவர்கள் நிரந்தர ஊழியராக நியமிக்க வேண்டும். இதர அரசு ஊழியர் களுக்கு கிடைக்கும் சலுகைகள் இவர் களுக்கும் கிடைக்க வேண்டும் என்றார்.  மேலும் அவர் பேசுகையில், சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தின் துவக்கத்தில் எங்கள் பாக்கெட்டில் ஆட்சி யாளர்கள் இருக்கிறார்கள். உங்களால்  ஒன்றும் செய்ய முடியாது என தொழி லாளர்களிடம் அந்த நிர்வாகம் தெரி வித்துள்ளது. இதனை இத்தொழி லாளர்கள் எங்களிடம் தெரிவித்தபோது, ஒன்றுபட்டு உறுதியாக போராடினால் வெற்றி நிச்சயம் என்று நாங்கள் உறுதி யளித்தோம்.

கடவுளின் வரம்

நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் செயிண்ட் சைமன் என்ற பாதிரியார் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் படும் வேதனைகளை கண்டு மனம் இளகினார். அவர்களுக்கு உதவிடும் பொருட்டு தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு போய் முதலாளி களிடம், தொழிலாளர்களின் கஷ்டங் களை எடுத்து கூறினார். பாதிரியார் என்ப தால் முதலாளிமார்கள் அனைத்து கோரிக்கைகளையும் கேட்டார்கள். பின்னர் அந்த கோரிக்கைகள் சம்பந்த மாக எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை. இதனால் மனம் வெறுத்துப் போன அந்த பாதிரியார் ஒரு கதை ஒன்று எழுதினார்.  அந்தக் கதையில் முதலாளிமார்கள் கடவுளிடம் வேண்டினார்கள். அப்போது அவர்களிடம் தோன்றிய கடவுள், உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங் கள் தருகிறேன் என கூறுகிறார்.  அப்போது முதலாளிகள், இந்த தொழிலாளிகள் சுத்த அழுக்கு பிடித்த வர்கள், படிக்காதவர்கள். இவர்கள் இருக்கும் உலகத்தில் எங்களால் இருக்க முடியாது. ஆகவே, இங்கு இருக்கக்கூடிய எல்லா தொழிலாளர்களையும் நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள் என வரம் கேட்டனர். அதற்கு கடவுள்  அப்படியே செய்கிறேன் என்று கூறிவிட்டு அனைத்து தொழிலாளர்களையும் அன்று இரவே அழைத்துக்கொண்டார்.  மறுநாள் காலையில் எழுந்த முத லாளிகளுக்கு பணிவிடை செய்வதற்கு, உணவு சமைத்துக் கொடுப்பதற்கு, வேலை செய்வதற்கு எந்த ஒரு தொழிலாளியும் இல்லாததால் மிகவும் அவஸ்தைப் பட்டனர். அய்யோ தொழிலாளிகள் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது என உணர்ந்து மீண்டும் கடவுளிடம் முதலாளிமார்கள் தொழிலாளிகள் அழுக்கு பிடித்தவர்களாக இருந்தாலும் அவர்கள் படிக்காதவர்களாக இருந்தா லும் அவர்கள் இல்லை என்றால் எங்க ளால் ஒன்றும் செய்ய முடியாது. ஆகை யால் மறுபடியும் அவர்களை எங்களிடமே கொடுத்து விடுங்கள் என வேண்டினர். கடவுளும் அப்படியே ஆகட்டும் என்று  மறுபடியும் தொழிலாளர்களை வர வழைத்தார்.

இதனைக் கண்ட தொழிலாளிகள் கடவுளிடம் அவர்கள் கேட்ட கோரிக்கை களை எல்லாம் செய்கிறீர்கள்; எங்களு டைய கோரிக்கைகளை செய்ய மாட்டீர் களா என்று கேட்கின்றனர். அதற்கு, கண்டிப்பாக செய்கிறேன் உங்களுடைய கோரிக்கை என்னவென்று கூறுங்கள்  என்று கேட்கிறார் கடவுள். இந்த முத லாளிமார்கள் இரக்கம் இல்லாதவர்கள், எங்களை அடிமையாக வைத்துக் கொண்டு எங்களுக்கு எந்தவித சலுகை களும் செய்வதில்லை. ஆகையால் இவர்களை மொத்தமாக அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்கின்றனர். கடவுளும் முதலாளிகளை அழைத்துச் சென்று விடுகின்றார். அதன் பின்னர் முதலாளிகள் இல்லாமல் தொழிலாளி கள் எல்லா உரிமையும் பெற்று சந்தோஷ மாக வாழ்ந்தார்கள் என்று அந்த கதை முடியும்.  இந்தக் கதை வெளிவந்தவுடன் பாதிரியார் செயிண்ட் சைமன் ஒரு குழப்பத்தை தொழிலாளர்களிடம் உருவாக்குகிறார்; அவர்களை போராடத் தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டி அந்த பாதிரியாரை சிரச் சேதம் செய்து விட்டனர். இது உண்மையில் நடந்தது.  முதலாளிகள் தங்களுடைய நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்பவர்கள். சாம்சங் போராட்டத்தில் அரசும் காவல் துறையும் வெளிப்படை யாக சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக வும் தொழிலாளர்களுக்கு எதிராக வும் செயல்பட்டனர். தொழிலாளர்கள் போராட்டம் நடத்தவும் அனுமதிக்க வில்லை. ஒவ்வொரு நாளும் துரத்தி துரத்தி அவர்களை கைது செய்தனர். ஆனால் தொழிலாளர்கள் மன உறுதி யோடு சிஐடியு பக்கம் நின்று 38 நாட்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள். சாம்சங் நிறுவனத்தையும் அரசையும் பணிய வைத்தார்கள். சாம்சங் தொழிலாளர்கள் வெற்றிக்கு சிஐடியு பக்கபலமாக இருந்து அவர்களுக்கு வழிகாட்டியது. தொழிலாளர்கள் சங்கமாக திரண்டு போராடும் போதுதான் அவர்கள் உரிமை களை பெற முடியும்.   இவ்வாறு அவர் பேசினார்.