மக்களவைத் தேர்தல் பிரச்சாரத் தின் பொழுது பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துக்களை அதிக குழந்தைகளை பெற்ற வர்களுக்கு தாரை வார்த்து விடுவார்கள்” என இஸ்லாமியர் களை மறைமுகமாக குறிப்பிட்டு வெறுப்பு பிரச்சாரம் செய்தார். மேலும்,”மத அடிப்ப டையில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது சட்ட விரோதம்” என மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சி அமைக்க உள்ள பாஜகவின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர், நர லோகேஷ்,“இஸ்லா மியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது சமூக நீதியாகும்” என கூறி பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நர லோகேஷ்,” இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு என்பது திருப்திப்படுத்தும் அரசியல் அல்ல. அது சமூக நீதியின் ஒரு அமைப்பு. இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது. தெலுங்கு தேசம் அதை ஆதரிக்கிறது. அதனால் ஆந்திராவில் இஸ்லாமியர்க ளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு தொடரும். ஆந்திராவில் சிறுபான்மையின ரின் தனிநபர் வருமானம் தான் மிக குறைவாக உள்ளது. வறுமையில் இருப்ப வர்களை மீட்டெடுப்பது தான் அரசின் பொறுப்பு. அதனால் தான் சமூக நீதியை நிலைநாட்டவே அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நமது நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற விரும்பினால் யாரையும் புறந்தள்ளி விட முடியாது. அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்வது தெலுங்கு தேசம் கட்சியின் நிலைபாடு” எனக் கூறினார். தங்களது கட்சியின் நிலைபாடு என்ற பெயரில் பாஜகவின் இந்துத்துவா கொள்கைக்கு எதிரான பதிலை கூறி யுள்ள சந்திரபாபுவின் மகன் நர லோ கேஷை சமூக வலைத்தளங்களில் பாஜ கவினர் விமர்சித்து வருகின்றனர். மேலும் மத்தியில் தெலுங்கு தேசம் ஆதரவோடு மோடி 3ஆவது முறையாக பிரதமர் பதவியில் அமர உள்ள நிலையில், தெலுங்கு தேச கட்சியின் நிலைபாடு பாஜக வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.