states

img

60 ஆண்டுகளுக்கு தனியார் முதலாளிகளுக்கு குத்தகை புகழ்பெற்ற அசோகா ஹோட்டலையும் மோடி அரசு விடுவதாக இல்லை...!

புதுதில்லி, டிச.13- தில்லி அசோகா ஹோட்டலை யும், அதற்குச் சொந்தமான சுமார் 25 ஏக்கர் வரையிலான நிலங்க ளையும் 60 ஆண்டுகள் முதல் 90 ஆண்டுகள் வரை, தனியார் முத லாளிகளுக்கு குத்தகைக்கு விட நரேந்திர மோடி அரசு முடிவு செய் துள்ளது. நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்று ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி யும், அடுத்த நான்காண்டுகளுக் குள் பொதுத்துறை நிறுவனங்க ளின் சொத்துக்களை குத்த கைக்கு விட்டு ரூ. 6 லட்சம் கோடி யும் நிதி திரட்ட மோடி அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கான வேலை களை ஏற்கெனவே ஆரம்பித்து விட்டது. ‘ஏர் இந்தியா’வை ரூ. 18 ஆயி ரம் கோடிக்கு விற்று முடித்துள்ள பாஜக அரசு, பாரத் பெட்ரோலி யம் (BPCL), பிஇஎம்எல் (BEML), ஷிப்பிங் கார்ப்பரேசன் (Shipping Corporation Of India), பவன் ஹான்ஸ் (Pawan Hans), சென்ட்ரல் எலக்ட்ரா னிக்ஸ் (Central Electronics)’ என்ஐஎன்எல் (NINL) ஆகிய 6 பொதுத்துறை நிறுவனங்களை 2022 ஜனவரிக்குள் தனியா ருக்கு விற்க காலக்கெடு நிர்ண யித்துள்ளது. பிஎஸ்என்எல் (BSNL), எம்டிஎன்எல் (MTNL) நிறுவனங்களின் சொத்துக்களை ரூ. 70 ஆயிரம் கோடிக்கு விற்று முடிக்கவும்,

எல்ஐசி-யில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்ப தற்கும் தீவிரம் காட்டி வரு கிறது. இந்த வரிசையில்தான், புகழ் பெற்ற அசோகா ஹோட்டல் மற் றும் அதன் பல ஏக்கர் சொத்துக் களை தனியார் முதலாளிகளுக்கு குத்தகைக்கு விட தீர்மானித்துள் ளது. தில்லியின் மையப்பகுதியில் தூதரக அலுவலகங்கள் அதிகம் உள்ள இடத்தில் அமைந்திருப் பதுதான் அசோகா ஹோட்டல் ஆகும். 500-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட இந்த ஹோட்டல், 1956-இல் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முன்முயற்சியில் கட்டப்பட்டதா கும். இந்திய சுற்றுலா மேம்பாட் டுக் கழகத்தின் (ஐடிடிசி) கட்டு பபாட்டில் தற்போது இயங்கி வருகிறது.  தற்போது இந்த ஹோட்டலில் உள்ள தரை விரிப்புகள் மற்றும் மரச் சாமான்களை புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு ரூ. 400 கோடி முதல் ரூ. 500 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்ட தாக கூறப்படுகிறது.

ஆனால், மோடி அரசு இதையே ஒரு கார ணமாக்கி, தரைவிரிப்புகள், மரச் சாமான்களுக்கு பல கோடி ரூபாய் செலவிடுவதை விட, ஹோட் டலை தனியாருக்கு குத்தகைக்கு விட்டுவிடலாம் என்று தீர்மானித் துள்ளது.  அசோகா ஹோட்டலை 60 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது; அதனைச் சுற்றியுள்ள சுமார் 8 ஏக்கர் நிலத்தில் 6.3 ஏக்கர் நிலத்தை ஹோட்டல் அல்லது சர்வீஸ் அபார்ட்மெண்ட் கட்டிக் கொள்ள அனுமதிப்பது; 1.8 ஏக் கர் நிலத்தை வர்த்தக நோக்கத் தில் பயன்படுத்திக் கொள்ள அனு மதிப்பது என்று திட்டம் போட்டுள் ளது.  அசோகா ஹோட்டல் கட்டப் பட்டுள்ள 25 ஏக்கர் நிலம், 1956- ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீர் மன்னர் குடும்பத்தால், அரசாங் கத்திற்கு வழங்கப்பட்டது என் பது குறிப்பிடத்தக்கது.

;