states

img

தனியாக ‘நல்நிர்வாக வாரம்’ எதற்கு? நாட்டில் 7 ஆண்டாகவே நல்ல நிர்வாகம் இல்லை!

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேச்சு

புதுதில்லி, டிச.20- கடந்த 7 ஆண்டுகளாக நாட் டில் நல்லாட்சி நடக்காத போது, ஒரு வாரத்திற்கு மட்டும் ‘நல்நிர்வாக வாரம்’ கடைப்பிடிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார். தான் எழுதிய ‘பிரைட், பிரெஜூ டிஸ், பண்டிட்ரி (Pride, Prejudice & Punditry’) என்ற நூலின் வெளி யீட்டு விழாவில் கலந்துகொண்ட சசி தரூர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது: “நாட்டில் தற்போது பேச்சு சுதந்திரம் இல்லை. பேச்சுச் சுதந்தி ரம் நசுக்கப்படுகிறது. அவ்வாறி ருக்க, ‘நல்நிர்வாக வாரம்’ கொண் டாடுவதாக இந்த அரசு சொல்கிறது. ஆனால், எங்கே நல் நிர்வாகம் நடக்கிறது? கடந்த 7 ஆண்டுகளா கவே நல்ல நிர்வாகம் இல்லை. ஆனால், அரசாங்கம் அதற்காக ஒரு விழா எடுப்பது நகைப்புக்குரி யது.

இது வெறும் அடையாள அர சியல். பாஜகவின் ஆட்சி வெற்றுக் கோஷங்களால் ஆன ஆட்சி. நல் நிர்வாகத்துக்காக ஒரு வாரக் கொண்டாட்டம் தேவையற்றது. ஆண்டில் உள்ள 52 வாரமும் நல் நிர்வாகத்தை அரசு உறுதி செய்ய வேண்டும். அரசியலில் எதுவுமே நிரந்தர மில்லை. அரசியலில் மாற்றம் ஏற் பட ஒரு வாரம் அதிகமான காலம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக இரண் டரை ஆண்டுகள் இருக்கின்றன. அதனால், பாஜகவுக்கு எதிராக தற்போது வெவ்வேறு குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணை யும். ஏனெனில் பாஜகவை தோற்க டிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, பாஜகவின் கொள்கைகளை, அர சியலை தோற்கடிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் எண் ணம் ஆகும்.” இவ்வாறு சசி தரூர் கூறியுள் ளார்.

;