states

img

அமெரிக்க ஆளுநரின் கருத்தால் இந்தியாவில் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்  திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்  றின் அடிப்படையில் தங்கம் விலை  நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படு கிறது. இதனால் ஒவ்வொரு நாளும் தங்  கம் விலை ஏற்றம் இறக்கமாக உள்ளது.  இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க வங்கி களின் கட்டுப்பாட்டு மையமான பெடரல்  ரிசர்வ் வங்கியின் தலைவர் செவ்வாயன்று  ஜே பவெல், “அமெரிக்காவில் வட்டி விகி தம் குறைக்கப்படலாம்” என கருத்து தெரி வித்தார். இதன் எதிரொலியாக புதனன்று நாட்டில் தங்கத்தின் விலை வரலாறு  காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.  சென்னையில் கிராம் ஒன்றுக்கு ரூ.90  உயர்ந்து, சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள் ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 5,870க்கும், சவரன் ரூ.46,960க்கும் விற்  பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் உயர்ந்து ரூ.82.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு தொடர்ந்து அடுத்த 3 மாதம் வரை நீடிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.