states

img

பாலினம் சார்ந்த பயன்படுத்தக் கூடாத வாா்த்தைகள் பட்டியல் விரைவில் வெளியீடு

புதுதில்லி, மார்ச் 18 - நீதிமன்ற விசாரணைகள் மற்றும் தீர்ப்பு களின்போது பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய பட்டியல் விரை வில் வெளியிடப்படும் என்று உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் பாலின சமத்துவ விழிப்புணர்வு மற்றும் புகார்கள் குழு சார்பில், அண்மையில் தில்லி யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டி.ஒய். சந்திர சூட் பேசியிருப்பதாவது: “பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது, தகாத சொற்களைப் பயன் படுத்துவதை சகித்துக் கொள்ளவே முடி யாது. சில நீதிமன்றத் தீர்ப்புகளில், திருமணம் செய்யாமல் உறவு வைத்துள்ள பெண்க ளைக் குறிப்பிடுவதற்கு ஆங்கிலத்தில் ‘காங்கியூபின்’ (Concubine) என்று நீதிபதி கள் குறிப்பிட்டுள்ளனர். இது தகாத வார்த்தை யாகும். இதுபோன்ற விஷயங்களை வெளிப் படையாகக் கையாளாவிட்டால், ஒரு சமூக மாக நாம் வளர்வது கடினம். இதனைக் கருத்தில் கொண்டு, நீதிமன்ற விசாரணை கள் மற்றும்  தீர்ப்புகளின்போது நீதிபதிகள் பயன்படுத்தக் கூடாத பாலின வார்த்தை கள் அடங்கிய பட்டியல் விரைவில் வெளி யிடப்பட உள்ளது. பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதற்கும், அவர்களுக்கு எதிராக தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவ தற்கும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு டி.ஒய். சந்திர சூட் குறிப்பிட்டுள்ளார்.

;