பாட்னா, செப்.23- ஒன்றிய பாஜக தலைமையிலான அரசை அகற்றவும், நாட்டின் மதச்சார் பற்ற தன்மையைப் பாதுகாக்கவும், ஜன நாயகத்தை நிலை நிறுத்தவும் மதச்சார் பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தினார். பீகார் மாநிலம் பாட்னாவில் வியாழ னன்று மாலை நடைபெற்ற பேரணி-பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் சீத்தாராம் யெச்சூரி. பிரதமர் மோடி தலைமையிலான மக்கள் விரோத அரசுக்கு எதிராக செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடை பெற்ற நாடு தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வியாழனன்று பேரணி-பொதுக் கூட்டம் நடைபெற்றது.
பாட்னாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க காந்தி மைதானம் குறித்துப் பேசிய யெச்சூரி, மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தியதிலும் வரலாற்றுப் பூர்வமான போராட்டங்களுக்கும் காந்தி மைதானத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உள் ளது. லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தின் ‘சம்பூர்ண கிராந்தி (ஒட்டுமொத்த புரட்சி)’ என்ற முழக்கம் காந்தி மைதானத்திலிருந்து எதிரொலித்தது. இந்தக் குரல் மக்களை ஒருங்கிணைத்தது. அதன் மூலம் அவசரநிலை தோற்கடிக்கப்பட்டது, ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியலமைப்பு சட்டம் இவற்றோடு நமது நாட்டையும் பாஜக மற்றும் ஆர் எஸ்எஸ் அமைப்பிடமிருந்து காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்காக நாட்டின் மதச்சார்பற்ற தன்மை யைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்தை நிலை நிறுத்தவும் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும். பீகாரில் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் இடதுசாரி சக்திகளும் ஒன்றி ணைவதைப் பாராட்டிய யெச்சூரி, வகுப்புவாதம் மற்றும் சர்வாதி காரத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்த முயற்சி நாட்டிற்கே முன்மாதிரியாக இருக்கும் என்றார்.
தொடர்ந்து அதிகரித்து வரும் பண வீக்கம் மற்றும் வேலையின்மை பிரச்ச னைகளைத் தீர்க்க மோடி அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான பொதுச் செலவினத்தை அதிகரித்து, அதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். ஆனால் தற்போது, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நமது இளைஞர்களில் 42 சதவீதம் பேருக்கு வேலை இல்லை என்பதை யெச்சூரி சுட்டிக்காட்டினார். ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்த யெச்சூரி, குஜராத்தில் வேதா ந்தா-ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் உற்பத்தித் திட்டங்களுக்கு ரூ. 80,000 கோடி மானியம் வழங்கியுள்ளனர். ஆனால் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 72,000 கோடி மட்டுமே செலவிடு கின்றனர். இது மோடி அரசின் நாடகத்தை அம்பலமாக்கி உள்ளது என்றார்.
மோடியை வெளியேற்றுங்கள்
தனது உரையை நிறைவு செய்வதற்கு முன்பாக யெச்சூரி, “பாரத் பச்சாவோ, மோடி பகோ (இந்தியாவைக் காப்பா ற்றுங்கள், மோடியை வெளியேற்றுங் கள்)” என்று ஐந்து முறை கூறினார். கூடி யிருந்த மக்கள் இந்தியாவைக் காப்பாற்று வோம்... மோடியை வெளியேற்றுவோம் என உரத்த குரலில் கூறினர். கூட்டத்தில் சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே, பீகார் மாநிலச் செயலாளர் லாலன் சவுத்ரி, மத்திய குழு உறுப்பினர்கள் அவதேஷ் குமார், அஜய் குமார் உள்ளிட்ட தலைவர்களும் உரையாற்றினர். முன்னதாக முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய யெச்சூரி, “2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக நாட்டில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து விவாதித்ததாக பீகார் மாநில செய்தித்தாள்கள் தெரி விக்கின்றன.
நிதிஷ் வருகிறார்
கூட்டத்தைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய யெச்சூரி, பாஜகவை எதிர்கொள்ள ஒத்த எண்ணம் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைவதன் அவசியத்தைப் பற்றி விவாதிக்க தில்லியில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு நிதிஷ் வருகை தர உள்ளதாகக் கூறினார். அரசியலமைப்புச் சட்டம், நாடு மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் தன்மையைக் காப்பதே இன்றைய முக்கியக் கடமை. அதற்கு பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றார், மோடி அரசை அகற்ற வேண்டும் என்று யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறினார்.
சரியான நேரத்தில் தலைவர் வருவார்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி க்கு, பதிலளித்த யெச்சூரி சரியான நேரத்தில் “தலைவர் வருவார்” மதச்சார் பற்ற சக்திகள் அனைத்து மாநிலங்களி லும் ஒன்று சேர்ந்து தேர்தலில் போட்டி யிடும் என்று மேலும் கூறினார்.
மு.க.ஸ்டாலின் முன் மாதிரி
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமி ழகத்தில் ஒத்த கருத்துள்ள கட்சிகளை ஒன்றிணைத்துள்ளது இதற்கொரு முன்மாதிரியாக உள்ளது என்றார்.
டெலிகிராப் தகவல்களுடன்