states

img

கொல்கத்தா தெற்கின் நட்சத்திரம் ஆனார் மார்க்சிஸ்ட் கட்சியின் சைரா ஷா

கொல்கத்தா, மே 29 - நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கொல்கத்தாவில் இம்முறை கடும் போட்டி நிலவுகிறது. தெற்கு மற்றும் வடக்கு கொல்கத்தா தொகுதிகளில் இடது முன்னணி - காங்கிரஸ் கூட்டணி, திரிணா முல், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இங்கு ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தெற்கு கொல்கத்தாவில் கடந்த இரண்டு முறை வெற்றி பெற்ற மாலா ராய்,  இம்முறையும் திரிணாமுல் சார்பில் களத்தில் உள்ளார். சிபிஎம் சார்பில் சைரா ஷா ஹலீம் போட்டியிடுகிறார். 30 ஆண்டு கள் சட்டமன்ற சபாநாயகராக இருந்த சிபிஎம் தலைவர் ஹசிம் அப்துல் ஹலீம் மகனின் மனைவியும் நடிகர் நசுருதின் ஷாவின் மகளுமாவார் சைரா ஷா. சமூக ஆர்வலராகவும், எழுத்தாளராகவும் உள்ள இவர், தொகுதியில் பெரும் எழுச்சி யை உருவாக்கி வருகிறார். இந்தத் தொகுதியில் சேர்க்கப்பட் டுள்ள பாலிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி யில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் சைரா சிபிஎம் வேட்பாளராக போட்டியிட்டார். 2021இல் சிபிஎம் பெற்ற ஐந்து சதவிகித வாக்குகளை 30.6 சதவிகித மாக அதிகரித்து பாஜகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளினார். பாஜக வேட்பாள ராக தேபஸ்ரீ சவுத்ரி போட்டியிடுகிறார். திரிணாமுல் கட்சியின் பேரவை தலை மைக் கொறடாவாக இருந்த தேபஸ்ரீ  ராய், பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில்  இணைந்து வடக்கு கொல் கத்தாவில் வேட்பாளரும் ஆகியுள்ளார். தற்போதைய எம்பி சுதீப் பந்தோபாத்யா யை விலக்க வேண்டும் என்ற தேபஸ்ரீ முன் மொழிவை மம்தா பானர்ஜி நிராகரித்தார். பிரபல காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்பியுமான பிரதீப் பட்டாச்சார்யா, இடது சாரி - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.

;