கொல்கத்தா, டிச. 17 - பாஜகவும், மம்தா பானர்ஜி யும் ஒரே கனவையே காண்கின்ற னர் என்று, மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். சார்பு வார ஏடான ‘ஸ்வஸ்திகா’ மறைமுக மாக பாராட்டு தெரிவித்துள்ளது. தேசிய அரசியலில் பாஜக-வுக்கு எதிராக பிரதான எதிர்க் கட்சி தாங்கள்தான் என்று திரி ணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறி வருகிறார். மேகாலயா, அசாம், திரிபுரா, கோவா பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை தன்பக்கம் இழுத்து, இந்த மாநி லங்களில் காங்கிரஸ் கட்சியை அழிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இதனால் மம்தா பானர்ஜி, பாஜக-வின் ‘பி’ டீமாக மாறிவிட்டார் என்று காங்கிரஸ் மக்களவைக்குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட் டோர் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த பின்னணியிலேயே மேற்குவங்கத்திலிருந்து வெளி வரும் ஆர்.எஸ்.எஸ். சார்பு வார ஏடான ‘ஸ்வஸ்திகா’ ஏட்டில் நிர் மால்யா முகோபாத்யாய் என்பவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பிரதமர் நரேந்திர மோடியை, அண்மையில் மம்தா பானர்ஜி சந்தித்தார். அப்போ திருந்து அவரின் நிலைப்பாடு மாறிவிட்டது. முன்பிருந்த மம்தா பானர்ஜி தற்போது இல்லை. ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ (‘Congress Mukt Bharat’) என்பது நரேந்திரமோடியின் கனவு. மம்தா பானர்ஜியும் தற் போது அதே கனவை காண்கிறார். அந்த கனவை நனவாக்குவதற் காகவே வரலாற்றை அழிக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடு பட்டுள்ளார்” என்று நிர்மால்யா முகோபாத்யாய் குறிப்பிட்டுள்ளார்.