states

img

சுமார் ரூ. 400 கோடி அரசுப் பணம் வாரியிறைப்பு!

புதுதில்லி, ஜூலை 23 - நரேந்திர மோடி, இந்தியாவின் பிரத மராக இருந்த, கடந்த ஒன்பது  ஆண்டுகளில், 100 வெளிநாட்டுப்பய ணங்களை மேற்கொண்டுள்ளதாகவும், இதில், 124 நாடுகளை சுற்றி வந்துள்ள தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்த பயணங்களுக்காக 71 முறை நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் பிரதமர் மோடி, உலக வரைபடத்தில் இருக்கும் நாடுகளில் இதுவரை 64  நாடுகளுக்கு சென்றுவந்து விட்டார்  என்றும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.  சில நாடுகளுக்கு மீண்டும் மீண்டும்  சென்றதையும் கணக்கில் சேர்த்தால் அவர் 124 முறை வெளிநாடுகளில் வலம்  வந்துள்ளார்.

இவற்றுக்காக சுமார் 400 கோடி ரூபாய் அளவிற்கு அரசுப் பணம் வாரி யிறைக்கப்பட்டுள்ளது. பிரதமரான பிறகு 2014 ஜூன் 15 அன்று முதன்முறையாக தனது வெளிநாட்டுப் பயணத்தை மோடி துவங்கினார். முதன் முதலாக பூடானுக்குச் சென்றார். கடை சியாக 2023 ஜூன் 13 முதல் 25 வரை யிலான காலத்தில் அமெரிக்கா மற்றும்  எகிப்துக்கு சென்றார். இந்த இடைப் பட்ட காலத்தில்தான் பிரதமர் மோடி 100 பயணங்களை மேற்கொண்டி ருப்பதாக கூறப்படுகிறது. பதவிக்கு வந்த ஆண்டான 2014-இல்  மட்டும், பூடான், பிரேசில், நேபாளம், ஜப்பான், அமெரிக்கா, மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி தீவுகள், நேபாளம் ஆகிய 8 நாடுகளுக்கு மோடி சென்றார். இதில் நேபாளத்திற்கு 2 முறை பயணம் செய்தார். 2015-இல் செல்ஸ், மொரீஷியஸ், இலங்கை, சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, சீனா, மங்கோலியா, தென்கொரியா, வங்கதேசம், உஸ் பெகிஸ்தான், கஜகஸ்தான், துர்க் மெனிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய ஐந்து மத்திய ஆசிய நாடுகள், ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட், அயர்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, துருக்கி, மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய 26 நாடுகளை மோடி சுற்றி வந்தார்.  2016-ஆம் ஆண்டு பெல்ஜியம், அமெரிக்கா, சவூதி அரேபியா, ஈரான்,  ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர் லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ, உஸ் பெகிஸ்தான், மொசாம்பிக், தென்னாப் பிரிக்கா, தான்சானியா, கென்யா, வியட்நாம், சீனா, லாவோஸ், ஜப்பான் என 18 நாடுகளுக்கு பயணப்பட்டார். இந்த ஆண்டில் அமெரிக்காவுக்கே 2 முறை சென்றார். 

2017-இல் இலங்கை, ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ், கஜ கஸ்தான், போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல், ஜெர்மனி, சீனா, மியான்மர், பிலிப்பைன்ஸ் என  14 நாடுகளுக்குச் சென்றார். ஜெர்ம னிக்கே 2 முறை சென்றார். 2018-இல் சுவிட்சர்லாந்து, ஜோர்டான், பாலஸ்தீனம், ஐக்கிய அரபு  எமிரேட், ஓமன், ஸ்வீடன், இங்கிலாந்து, ஜெர்மனி, சீனா, நேபாளம், ரஷ்யா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப் பூர், சீனா, ருவாண்டா, உகாண்டா, தென்னாப்பிரிக்கா, நேபாளம், ஜப்பான், சிங்கப்பூர், மாலத்தீவு, அர்ஜெண்டினா ஆகிய 23 நாடுகளை சுற்றிவந்தார். அந்த ஆண்டில் சீனா, நேபாளம், சிங்கப்பூர் நாடுகளுக்கு தலா 2 முறை சென்றார். 2019-ஆம் ஆண்டில் தென் கொரியா, மாலத்தீவு, இலங்கை, கிர்கிஸ் தான், ஜப்பான், பூடான், பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட், பஹ்ரைன், ரஷ்யா, அமெரிக்கா, சவூதி அரேபியா, தாய்லாந்து, பிரேசில் ஆகிய 14 நாடுகளுக்குச் சென்றார். 2020ஆம் ஆண்டில் கொரோனா அச்சம் காரணமாக, ஒரு வெளி நாட்டுப் பயணத்தைக் கூட மோடி மேற்கொள்ளவில்லை. கொரோனா தாக்கம் தொடர்ந்த 2021-ஆம் ஆண்டில் வங்கதேசம், அமெரிக்கா, இத்தாலி, ஸ்காட்லாந்து ஆகிய 4 நாடுகளுக்கும், 2022-ஆம் ஆண்டில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், நேபாளம், ஜப்பான், ஜெர்மனி, ஐக்கிய அரபு  எமிரேட், உஸ்பெகிஸ்தான், ஜப்பான்,  இந்தோனேசியா ஆகிய 10 நாடு களுக்கும் மோடி சுற்றுப்பயணம் சென்றார். 2022-இல் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை இரண்டுமுறை சுற்றிவந்தார். 2023-ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வரையிலான 5 மாதங்களுக்குள் ஜப் பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்தி ரேலியா, அமெரிக்கா, எகிப்து ஆகிய 5 நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். பிரதமர் மோடி அதிகபட்சமாக அமெரிக்காவுக்கு 8 முறையும், ஜெர்மனி, ஜப்பானுக்கு தலா 6 முறை யும், ரஷ்யா, சீனா, நேபாளம், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு தலா 5 முறையும், இலங்கை, சிங்கப்பூர், ஐக்கிய அரபு  எமிரேட், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடு களுக்கு தலா 3 முறையும், இங்கி லாந்து, பிரேசில், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, தென் கொரியா, சவூதி அரேபியா, மலேசியா, வங்கதேசம், கஜகஸ்தான், கிர்கிஸ் தான், மாலத்தீவு, பூடான் ஆகிய நாடு களுக்கு தலா 2 முறையும் சுற்றுப்பய ணம் செய்துள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த வெளி நாட்டுப் பயணங்களுக்காக பல நூறு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதில், கடந்த 2014 முதல் 2019 வரை யிலான 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 359 கோடி செலவிடப்பட்டு உள்ளது. இந்தக் காலத்தில் மோடியின் பய ணத்திற்கு, அரசாங்கப் பணம் வாரி யிறைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, 2019 செப்டம்பரில் அமெரிக்கா சென்ற போது ரூ. 23.2 கோடி, 2014 ஜூலை யில் பிரேசில் சென்றபோது ரூ. 20  கோடி, 2015 மற்றும் 2019 ஆண்டுகளில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா சென்றபோது ரூ. 22 கோடி, 2015இல் அயர்லாந்து சென்றபோது ரூ. 18 கோடி என செலவிடப்பட்டு உள்ளது. இந்த 5 பயணங்கள்தான் அதிக செலவு ஏற்பட்ட பயணங்களாக கூறப்படுகிறது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியின் கொரோனா வுக்குப் பிந்தைய கால வெளிநாட்டுப் பயணச் செலவுகள் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவ தாசன், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் நாடாளுமன்றத் தில் கேள்வி எழுப்பியிருந்தனர். இவற்றுக்கு வெளியுறவுத்துறை அமைச் சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித் துள்ளார். அதில், பிப்ரவரி 2021 முதல் ஜூன் 2023 வரையிலான பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கான செல வுகள் மட்டும் ரூ. 30 கோடியே 80 லட்சத்து 47 ஆயிரத்து 075 என தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டு களில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ. 254 கோடியே 87 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக வெளி யுறவுத்துறை அமைச்சகம் நாடாளு மன்றத்தில் தெரிவித்துள்ளது.