states

இந்தியாவில் 45 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

புதுதில்லி, டிச.14- தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப் பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தற்போது 60 நாடு களுக்குப் பரவியுள்ளது. மிக வும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானி கள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பர வலை தடுக்க பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு உள் ளது. தில்லியில் மேலும் நான்கு பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிக்கப்பட் டோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.  ஆறு பேருக்கு ஒமைக் ரான் உறுதியாகிய நிலையில் ஒருவர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி யுள்ளதாகவும், தற்போது, 35 கொரோனா நோயாளிகள் மற்றும் சந்தேகத்திற்கிட மான மூன்று பேர் மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரி வித்துள்ளார்.  இதன்படி இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக் கப்பட்டோரின் மொத்த எண் ணிக்கை 45 பேராக உயர்ந் துள்ளது. மகாராஷ்டிரம்-20, குஜராத்-4, இராஜஸ்தான்-9, தில்லி-6, ஆந்திரா-1, கர்நாட கம்-3 சண்டிகர்-1, கேரளா-1.

தமிழக நிலவரம்

நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக சென் னைக்கு பயணம் செய்த 47 வயது நபருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்ட றியப்பட்டுள்ளது. அவருக்கு ஒமைக்ரான் மாறுபாட்டைக் குறிக்கும் எஸ்-ஜீன் குறை பாடு இருந்துள்ளது. இருப்பி னும், இது மரபணு சோதனை மூலம் இன்னும் உறுதிப்படுத் தப்படவில்லை. தவிர அவ ரது குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருக்குமோ என் கிற சந்தேகத்தின் அடிப்படை யில் அவர்கள் கிண்டி, கிங் நிறுவனத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளனர். அவர்களின் மாதிரி கள் முழு மரபணு சோதனைக் காக பெங்களூரு ஆய்வகத் திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 

;