அகமதாபாத், அக்.13- காஷ்மீரை இன்றைக்கும் ஆட்டிப்படைக்கும் பிரச்சனை களுக்கு இந்தியாவின் முதல் பிர தமர் ஜவஹர்லால் நேருதான் கார ணம் என குற்றம்சாட்டிய அமித்ஷா நேருவின் தவறை 370-ஆவது பிரிவை ரத்து செய்து மோடி பெருமை சேர்த்துள்ளார் என்றும் பெருமை யடித்துக்கொண்டார். குஜராத்தில் பாஜகவின்- ‘கௌரவ் யாத்ரா’யை தொடங்கி வைத்துப் பேசிய அமித்ஷா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டு வது தொடர்பாக காங்கிரஸ் எங் களை கேலி செய்கிறது. கட்டுமானப் பணிக்கான வேலைகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சட்டப்பிரிவு 370-ஐ புகுத்தியதால் தான் காஷ்மீர் குழப்பத்தில் இருந்தது. பல்வேறு பிரச்சனைகளில் காஷ்மீரை நாட்டோடு சரியாக ஒருங்கிணைக்க முடியவில்லை. 370-ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்று அனைவரும் விரும்பினர். பிரதமர் மோடி அதை முற்றிலுமாக நீக்கிவிட்டார் என் றார். கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் ஒருவர், குஜராத்தை காங்கிரஸ் ஆட்சி செய்தபோது “ஊரடங்கு உத்தரவு என்பது ஒரு வழக்கமான நிகழ்வாக இருந்தது. 365 நாட்களில் 200 நாட்கள் குஜ ராத்தில் ஏதாவது ஒரு பகுதியில் ஊர டங்கு அமலில் இருக்கும். ஆனால் மோடி ஆட்சிக் காலத்தில் ஊர டங்கே இல்லை என்ற நிலை உரு வாக்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் குஜ ராத் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வுள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள 144 தொகுதிகளை உள்ள டக்கும் வகையில் யாத்திரையைத் தொடங்கியுள்ளது பாஜக.