புதுதில்லி,டிச.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்க டேசனின் கோரிக்கையை ஏற்று, மயிலாடு துறை- மைசூர் சிறப்பு விரைவு ரயில் பாப நாசத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள் ளது. பாபநாசம் ரயில் நிலையம் சம்பந்தமான 6 கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சு.வெங்கடேசன் எம்.பி க்கு இரயில்வே நிர்வாகம் பதிலளித்துள்ளது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹி ருல்லா பாபநாசம் ரயில் நிலைய மேம்பாடு சம்பந்தமாக தலையீடு செய்யக்கோரி எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன டிப்படையில் அக்டோபர் 18 ஆம் தேதி நான் திருச்சி கோட்ட மேலாளருக்கு பாபநாசம் ரயில் நிலைய மேம்பாடு குறித்து பல கோரிக் கைகளை எழுப்பி கடிதம் எழுதி இருந்தேன். திருச்சி கோட்ட மேலாளர் எனக்கு வழங்கி யுள்ள பதிலில் உழவன் சோழன் ஜன சதாப்தி, மயிலாடுதுறை- திருச்சி பயணிகள் வண்டி ஆகியவை பாபநாசத்தில் நின்று செல்வதாகவும் அதேபோல மயிலாடுதுறை- மைசூர் சிறப்பு விரைவு வண்டி நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதில் அளித்துள்ளார். செந்தூர் விரைவு வண்டி நிறுத்துவது அதன் ஓட்ட நேரத்தை அதி கரிக்கும் என்பதால் சாத்தியமில்லை என்று பதிலளித்துள்ளார்.
அதே நேரத்தில் ரயில் பெட்டிகள் நிற்குமிடம் தெரிவிக்கும் மின்னணு பலகை அமைக்க ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதா கவும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். நடை மேடை தரை கான்க்ரீட் போடப்பட்டு உள்ள தாகவும் கிழக்குப்பகுதி நடைமேடையை நீட்டிப்பு செய்ய மறு ஒப்பந்தம் கோரப் பட்டுள்ளது என்றும் அது இறுதி நிலையில் உபள்ளதாகவும் அறிவித்துள்ளார். நடைமேடை நிழற்கூரை அமைப்பதற்கு ஒப்பந்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். நிலையஅணுகுசாலை சிமெண்ட் சாலையாகும் .அது உடைந்துள் ளது .அதை பழுது பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2021- 22 காலத்திலேயே அது முடிக்கப்படும். வாகன நிறுத்துமிடத்தில் உயர் கம்ப விளக்கு அமைக்க 2022- 23 ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும். பாபநாசம் ரயில் நிலையம் லூப்லைன் மற்றும் கிராசிங் சாத்தியம் இல்லாததால் ஒற்றைப் பாதை உள்ளதால் பிளாக் ஸ்டேஷன்ஆக மாற்றுவது சாத்தியமில்லை என்று பதில் அளித்துள்ளார். எனது கோரிக்கைகளை பரிசீலித்து நட வடிக்கை எடுக்க மேற்கொண்ட திருச்சி கோட்ட மேலாளருக்கு நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன். தலையீடு கோரி கவ னப்படுத்திய பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக் களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.