states

தக்காளி விலை : தப்ப முயலும் மோடி அரசு

புதுதில்லி/சென்னை,  ஜூலை 4 - தக்காளி விலை மிகக் கடுமையாக உயர்ந்து  நாடு முழுவதும் ஏழை எளிய மக்களை மிரட்டி வருகிறது. இந்த திடீர் விலையேற்றத்திற்கு  காரணம் என்ன என்ற கேள்வியை மோடி அரசு  புறந்தள்ளி வருகிறது. ஒன்றிய வர்த்தகம் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல், கடந்த ஒரு வாரகாலமாக தக்காளி விலை  உயர்ந்து வருகிறது, இதற்கு பருவமழையும் ஒரு  காரணம் என்று தங்களுக்கும் விலை உயர்விற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல தப்பித்துக் கொள்ளும் வகையில் தெரிவித்து உள்ளார். கடந்த மாதம் தக்காளிக்கு உரிய  விலை கிடைக்கவில்லை என மகாராஷ்டிராவில் தக்காளியை சாலைகளில் கொட்டி விவசாயி கள்  தங்கள் வேதனையை தெரிவித்தனர்.

ஆனால் ஒரே மாத இடைவெளியில்  தக்காளி யின் விலை உச்சத்திற்கு சென்றுள்ளது. தமிழ்நாட்டின் நிலவரப்படி 1 கிலோ தக்காளி 110 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. தக்காளி மட்டுமின்றி கத்தரிக்காய்,உருளைக்கிழங்கு,வெங்காயம் உள்ளிட்ட காய்கறி கள் மற்றும்  பருப்பு வகைகள் என அன்றாட ஊட்டச்சத்திற்கு தேவையான அனைத்து காய்கறிகளின்  விலையும் உயர்ந்து கொண்டே  செல்கிறது. இந்த விலை உயர்வு நாட்டில் பெரும்பான்மையாக உள்ள ஏழை மக்களை  கடுமையாக பாதித்துள்ளது. தங்களின் அன்றாட வருவாயில்  25 சதவீதத்திற்கு மேல் உணவிற்காக மட்டுமே செலவிட வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  கடத்த ஆண்டு ஜூன் மாதத்தை விட இந்த  ஆண்டு ஜுன் மாதம் தக்காளி விலை 66சதவீதம் வரை  உயர்ந்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. வெங்காயம் 7.5 சதவீதம்,உருளை  4.5 சதவீதம்,  துவரம்பருப்பு 7.8 சதவீதம் என  கடந்தாண்டு டன் ஒப்பிடும் போது தற்போது கூடுதல் விலை  உயர்வை கண்டுள்ளன.  தமிழ்நாடு மட்டும் இன்றி  தக்காளி விவ சாயத்தில்  அதிகளவு ஈடுபட்டு வரும்  ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களையும் உள்ளடக்கி நாடுமுழுவதும் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன்  மாதம் துவக்கம் முதல் இறுதி வரை விற்பனை  மண்டிக்கு வந்த தக்காளி வரத்தை வைத்து விலை உயர்விற்குப் பின் உள்ள காரணத்தை நம்மால் நெருங்க முடிகிறது.

தக்காளி வரத்து குறைந்தது ஏன்?

நாடு முழுவதும் பல விற்பனை மண்டி களுக்கு ஜூன் முதல் வாரம்   97,293 டன்கள்  வரை  வரத்தான தக்காளி, மாத இறுதி வாரத்தில்  62,842 டன் மட்டுமே  வரத்தாகி உள்ளது. இது 2022 ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 50 முதல் 80 சதவீதம் குறைவாகும். கடந்த 4 ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்த்தால்  இதுவே மிக குறைவான வரத்தாகும். இதேபோல மாநில வாரியாக பார்த்தால்  ஜூன் முதல் வாரத்தில் 12,500 டன் தக்காளி உற்பத்தி செய்த உத்தரப் பிரதேசம் ஜூன் இறுதி வாரத்தில் 58 சதவீதம் குறைவாக வெறும்  5,300 டன்கள் மட்டுமே உற்பத்தி செய்துள் ளது. இதேபோல ஆந்திரா 31 சதவீதம், மகா ராஷ்டிரா 52 சதவீதம் என  குறைவான  உற்பத்தியே நடந்துள்ளது. இந்த உற்பத்தி வீழ்ச்சி காரணமாக வரத்து  குறைந்தது. இதன் காரணமாக ஜூன் 2 மற்றும் 3 ஆம் வாரத்தில் உயரத் துவங்கிய தக்காளி  விலை ஜூன் 30 அன்று 100  ரூபாய்தொட்டது. குறிப்பாக  உத்தரப்பிரதேசத்தின் 13 நகரங்களில் 100 அல்லது அதற்கு மேல் தக்காளி விற்பனை யானது; கர்நாடக மாநிலம் பெல்லாரி, மத்தியப்  பிரதேசம் தார் மற்றும் ஆந்திராவின் கர்னூல் ஆகிய நகரங்களில் விலை 110 ரூபாயைத் தொட்டுவிட்டது.  இந்த விலை உயர்விற்கு அடிப்படைக் கார ணம் பருவ நிலை மாற்றம் என்று கூறப்படு கிறது.  இந்தியாவில் எல்நினோ-வின் காரணமாக பருவமழையில் தாக்கம் ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த எல்நினோ தாக்கத்தினால் குறுவைப் பருவ நெல் சாகுபடியில் பெருமளவு தாக்கம் செலுத்தும் என்று கூறப்படுகிறது.

தக்காளி மட்டுமல்ல; அதிகமழை மற்றும் தாமதமான  பனிப் பொழிவின் காரணமாக  இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் விளைச்சல் 50 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்திக்க உள்ளது.  இதனால் ஒரு பெட்டி ஆப்பிள் விலை ரூ.1600  முதல் ரூ.1800 வரை உயரும் என்று கூறப்படுகிறது. தக்காளி உள்ளிட்ட விவசாய விளை பொருட்களின் சந்தை விலைவாசி மிகக் கடுமை யாக உயர்ந்திருப்பதற்கு பருவமழை மற்றும் காலநிலை மாற்றம் ஒரு காரணம் என்ற  போதிலும், விவசாய விளை பொருட் களுக்கான விலையை சந்தையே தீர்மானித்து கொள்ளும்  என்று அரசு கைவிட்டதும், விலை  கடுமையாக உயர்ந்தாலும் அரசு அதில் தலை யிடாது என்பதும்தான்  அடிப்படைக் காரணம் ஆகும். தக்காளி மட்டுமல்ல, அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் இக்காலக் கட்டத்தில் மிகக் கடுமையான உயர்வை சந்தித்துள்ளன. பணவீக்க விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதி கரித்துள்ளது. விலை வாசி சுழல் வேகத்தில் உயர்ந்த போதிலும் மோடி அரசு இப்போதும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக் கிறது.
 

;