states

img

‘காஷ்மீர் மாநிலம் வலியில் இருக்கிறது’ மக்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் காந்தி தேசம், கோட்சே நாடாக மாறும்!

மெகபூபா முப்தி பேச்சு புதுதில்லி, டிச.7- காஷ்மீர் மக்கள் தொடர்ந்து ஒடுக்கப் படுவதாகவும், இப்போதும் மக்கள் விழித்துக் கொள்ளாவிட்டால், காந்தி தேசம் விரைவிலேயே கோட்சே நாடாக மாறும் என்றும் மெகபூபா முப்தி எச்ச ரித்துள்ளார். காஷ்மீர் மக்கள் மீதான அடக்கு முறையையும், தீவிரவாதத்தை ஒடுக்கு கிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதையும் உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெக பூபா முப்தி, திங்களன்று தில்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டார்.  அப்போது, ‘காஷ்மீர் வலியில் இருக் கிறது’ என்ற வாசகம் கொண்ட அட்டை யை கையில் ஏந்தியிருந்த மெகபூபா, தான் காஷ்மீரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை என்பதால், நாட்டின் தலைநகரில் தர்ணா மேற் கொள்ள முடிவெடுத்ததாக கூறினார்.  மேலும் பேசுகையில், “காஷ்மீர் சிறைச்சாலையாகி விட்டது. மக்கள் தங்க ளது கருத்துக்களைக் கூறுவதற்கு அனு மதிக்கப்படுவது இல்லை. சிறப்பு அந் தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து காஷ்மீர் மக்கள் ஒடுக்கப்பட்டு வருகின்ற னர். காஷ்மீர் வலியில் இருக்கிறது. இப் போதும் கூட மக்கள் விழித்துக்கொள்ள வில்லை என்றால், காந்தியின் நாடு நாது ராம் கோட்சே-வின் நாடாக மாறும் நாட்கள் நீண்ட தூரத்தில் இல்லை. அதன் பின் நாம் அனைவரும் உதவியற்றவர்களாக இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

;