மேல்முறையீட்டு நாடகத்தை துவங்கிய மம்தா பானர்ஜி
கொல்கத்தா மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா வில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூறாய்வில் தெரிய வந்தது. இந்த கொடூர கொலை தொடர்பாக மேற்குவங்க காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். மருத்துவ மாணவியின் மரணத்துக்கு நீதி கோரி நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தினர். குறிப்பாக கொல்கத்தாவில் சுமார் 50 நாட்கள் தொடர் போராட்டங்களும் நடைபெற்றன. நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் ஆர்.ஜி.கர் மருத்துவமனை தலைவர் (டீன்) சந்தீப் கோஷ் பதவி விலகினார்.
சிபிஐ விசாரணை
மருத்துவ மாணவி கொலை வழக்கை மேற்குவங்க காவல்துறை விசாரித்து வந்தது. ஆனால் கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் படி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. 2024 அக்டோபர் 7ஆம் தேதி கொல்கத்தா விசா ரணை நீதிமன்றத்தில் (சீல்டா) சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் சஞ்சய் ராய் மட்டுமே குற்றத்தில் ஈடு பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2025 ஜனவரி 18ஆம் தேதி சீல்டா நீதிமன்ற நீதிபதி அனிபர் தாஸ்,”சஞ்சய் ராய் குற்றவாளி” என தீர்ப்பளித்து, ஜனவரி 20ஆம் தேதி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை தண்டனை விதித்து உத்தரவிட்டார். பிருந்தா காரத் கண்டனம் சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்கப் படும் என நாடு முழுவதும் எதிர்பார்ப்பு நிலவி யது. ஆனால் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படு த்தியது. “இந்தியா” கூட்டணிக் கட்சிகள், அர சியல் விமர்சகர்கள், மகளிர் அமைப்புகள் என நாடு முழுவதும் சஞ்சய் ராய்க்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமானது அல்ல என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறுகையில், “ஒரு தனி நபர் ஒரு பெண்ணை பொது இடத்தில், பிறரது ஒத்து ழைப்பு இல்லாமல் எப்படி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முடியும்? சிபிஐ குற்றப் பத்திரிகையில் இதுதொடர்பாக சாதாரண குறிப்புகள் கூட இல்லை. மாநில அரசாங்கத் தின் பாதையிலேயே சிபிஐ விசாரணை மேற் கொண்டுள்ளது. அதனால் தான் கொல்கத்தா மாணவி படுகொலை விவகாரத்தில் வழங்கப் பட்ட தண்டனை திருப்தியற்றதாக உள்ளது” என கண்டனம் தெரிவித்தார்.
மேற்கு வங்க காவல்துறை - சிபிஐ மறைமுக கூட்டணி
பிருந்தா காரத் கூறியதன் பின்னணியில் ஒரு முக்கிய சந்தேகம் வலுத்தது. அதாவது கொல்கத்தா மருத்துவ மாணவி வழக்கில் மேற்கு வங்க காவல்துறை - சிபிஐ மறைமுக கூட்டணி வைத்து இருப்பதாக சந்தேகம் வலுவாக கிளம்பியுள்ளது. சஞ்சய் ராயிடம் மேற்குவங்க காவல்துறை எப்படி விசாரணை நடத்தியதோ, அதே முறையில் தான் சிபிஐ அமைப்பும் விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. புதிதாக எவ்வித விசாரணை தகவலையும் சிபிஐ வெளியிடவில்லை. குறிப்பாக பிருந்தா காரத் எழுப்பும் முக்கிய கேள்வியான,”ஒரு தனி நபர் ஒரு பெண்ணை பொது இடத்தில், பிற எந்த ஒத்து ழைப்பும் இல்லாமல் எப்படி பாலியல் பலாத் காரம் செய்து கொலை செய்ய முடியும்?” என்பது தொடர்பாக சிபிஐக்கு ஏன் சந்தேகம் எழவில்லை? என்ற கேள்வியும் பரவலாக கிளம்பின. அதே போல சஞ்சய் ராய், “நான் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட வில்லை. என்னை வழக்கில் சிக்க வைத்துள்ள னர். சிறையில் அடித்து துன்புறுத்தினர். பல் வேறு ஆவணங்களில் என்னிடம் வலுக்கட்டாய மாக கையெழுத்து பெற்றனர்” என சிபிஐ விசாரணை வாக்கு மூலத்திலும், நீதிமன்றத்தி லும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவ மாணவி பாலியல் வன் கொடுமை வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாகவும் சஞ்சய் ராய் நீதி மன்றத்தில் கூச்சலிட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியது. சிபிஐ விசாரணையில் ஐபி எஸ் அதிகாரி தொடர்பு குறித்து சஞ்சய் ராய் கூறாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதையெல்லாம் விசாரணையில் எடுத்துக் கொள்ளாததும், குற்றப்பத்திரிகையில் இணைக்காததும் மேற்குவங்க காவல்துறை - சிபிஐ மறைமுக கூட்டணி எனும் தோற்றத்தை வலுவாக உருவாக்கியுள்ளது.
யார் அந்த ஐபிஎஸ் அதிகாரி?
இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக சஞ்சய் ராய் நீதி மன்றத்தில் கூச்சலிட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியது. அந்த ஐபிஎஸ் அதிகாரி யார் என்பது தொடர்பாக இதுவரை எவ்வித தக வலும் வெளியாகவில்லை. ஆனால் திரிணா முல் காங்கிரஸ், பாஜக என ஏதாவது ஒரு கட்சிக்கு சஞ்சய் ராய் கூறும் ஐபிஎஸ் அதிகாரி நெருக்கமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பாஜக மவுனம் - கள்ளக் கூட்டணி
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி “இந்தியா” கூட்டணியில் இருந்தாலும் சஞ்சய் ராய்க்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை பாரபட்சமானது என்றும், மேற்குவங்க காவல்துறை - சிபிஐ சரி யாக விசாரணை மேற்கொள்ளவில்லை என்ப தால் சீல்டா நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வகை யில் தீர்ப்பு வழங்கியுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் மேற்குவங்க எதிர்க்கட்சியான பாஜகவோ பெரி யளவில் கண்டனங்களை தெரிவிக்கவில்லை. பாஜகவிற்கு நெருக்கமான தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவரான ரேகா சர்மா மூலம் கண்டனம் தெரிவித்து ஓடி ஒளியும் வேலையில் ஈடுபட்டுள்ளது. பாஜகவின் இந்த மவுனம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கள்ளக் கூட்டணி வைத்து இருப்பதான சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.
மம்தா அரசு பல்டி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன். மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அதில் நிலையாக இருந் தோம். ஆனால் ஆயுள் தண்டனை வழங்கப் பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பில் எங்களுக்குத் திருப்தி இல்லை. வழக்கு மாநில காவல் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை” என பிரச்சனையை திசை திருப்பும் நோக்கத்தி லும், தங்கள் மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததை மறைக்க மழுப்பலாக பேசினார். தொடர்ந்து சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்த கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும், தூக்கு தண்டனை விதிக்கக் கோரியும் மேற்கு வங்க அரசு கொல்கத்தா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு நீதி கிடைக்க விடாமல் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கள்ளக் கூட்டணி தடுத்துள்ளது. வரும் காலங்களில் இதே நிலை நீடித்தால் பாலி யல் வன்முறை கூடாரங்களாக உள்ள பாஜக ஆளும் மாநிலங்களின் வரிசையில் மேற்கு வங்கமும் இணையும். தற்போதைய சூழ்நிலையில் மேற்கு வங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்களின் அட்டூழியத்தால் பெண்களுக்கு பாது காப்பற்ற மாநிலமாக உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.