states

img

மோடியின் முதலைக் கண்ணீர் : ‘தி டெலிகிராப்’ ஏடு கேலி

புதுதில்லி, ஜுலை 22- மணிப்பூரில் குக்கி பெண்களின் ஆடைகளைக் களைந்து பாலியல் வன் கொடுமை செய்த சம்பவம் சர்வதேச ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது.பிபிசி,அல் ஜசீரா, நியூ யாரக் டைம்ஸ், தி கார்டியன், தி டைம்ஸ் போன்ற ஊடகங்கள் மணிப்பூர் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொ டுத்தன. தேசிய நாளிதழ்க ளும் இரண்டாவது நாளாக தொடர் செய்திகளை வெளி யிட்டன, அது மோசமாக இல்லை. அதே நேரத்தில், மோடிக்கு ஆதரவான காட்சி ஊடகங்கள் மணிப் பூர் செய்திகளை முடிந்த வரை சமாளித்தன. மணிப்பூர் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறி யதை அரசுக்கு ஆதரவான ஹிந்தி-ஆங்கில சேனல்கள் முன்னிலைப்படுத்தின. இருப்பினும், இந்தி நாளி தழ்கள் பொதுவாக மணிப் பூர் செய்திகளை முதன்மை யாக முதல் பக்கத்தில் கையா ண்டன. உச்சநீதின்றம் கூறிய கருத்துகள் இந்தி நாளிதழ்க ளிலும் முக்கிய இடம் பிடித்தன.

மோடி ஆட்சியில் இந்தி யாவில் சிறுபான்மை வேட்டை தொடர்கிறது என்ப தற்கு உதாரணமாக பல சர்வ தேச ஊடகங்கள் மணிப்பூர் செய்திகளை அணுகின. இந்தியாவில் கிறிஸ்துவப் பெண்களைக் கூட்டு பாலி யல் வல்லுறவு செய்வது விவாதமாகி வருவதாக ‘தி டைம்ஸ்’ செய்தி வெளி யிட்டுள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் இறுதியாக மோடி பதில ளித்துள்ளார் என்பதே ‘தி கார்டியன்’ நாளிதழின் தலைப்பு. இறுதியாக மோடி பேசியதாகவும் அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. மணிப்பூர் சம்பவம் இந்தி யாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும், இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் பிபிசி மற்றும் நியூயார்க் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடியின் தாமதமான பதிலை கிண்டல் செய்து, ‘தி டெலிகிராப்’ தனது முதல் பக்கத்தில் முதலை கண்ணீர் வடிக்கும் படத்தை வெளி யிட்டது. 56 அங்குல தோலைக் கடந்து வலியும் வெட்கமும் கடந்து செல்ல 79 நாட்கள் எடுத்ததாக கேலி செய்துள்ளது தி டெலிகிராப் ஏடு. டைம்ஸ் ஆஃப் இந் தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ் பிரஸ் போன்ற தினசரி செய்தி த்தாள்களும் மணிப்பூரில் பெண்கள் பாலியல் வல்லு றவு செய்யப்பட்ட செய்திக ளுக்கு முக்கியத்துவம் அளித்தன.

தில்லியில் மாணவர்-இளைஞர்கள் போராட்டம்

மணிப்பூரில் அமைதி யை உடனடியாக மீட்டெ டுக்கக் கோரியும், குக்கிப் பெண்களிடம் நடந்த கொடூர மான சித்திரவதைக்கு எதி ராகவும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தில்லி ஜந்தர் மந்தரில் எஸ்எப்ஐ மற்றும் டிஒய்எப்ஐ அமைப்புகள் இணைந்து நடத்திய போராட்டத்தில் மணிப்பூரை சேர்ந்தவர்கள் உட்பட சுமார் ஏராளமா னோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து டிஒய்எப்ஐ அகில இந்திய தலைவர் ஏ.ஏ.ரஹீம் எம்.பி பேசுகை யில், மோடி ஆட்சியில் எந்த ஒரு பெண்ணும் பாது காப்பாக இல்லை என்றும், மணிப்பூர் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய, மாநில அரசுகள் முற்றிலும் தவறிவிட்டதாகவும் கூறி னார். மாநிலத்தில் அமை தியை நிலைநாட்ட பிரதம ரும், மத்திய அரசும் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். எஸ்எப்ஐ அகில இந்திய தலைவர் வி.பி.சானு, பொ துச் செயலாளர் மயூக் பிஸ் வாஸ் ஆகியோர் பேசினர்.

ஜுலை 25 : மணிப்பூர் ஒருமைப்பாடு தினம்

மணிப்பூரில் பல மாதங்களாக நடந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழி லாளர்கள் சங்கம் ஆகியவை செவ்வாயன்று (ஜுலை 25) நாடு தழுவிய ஒருமைப்பாட்டு தினத்தை கடைபிடிக்கின் றன. மணிப்பூர் மாநிலத்தில் உடனடியாக அமைதி திரும்ப வும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் கோரி கூட்டு ஆர்ப்பாட்டங்கள், மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலங் கள், பொதுக்கூட்டங்கள் போன்றவை நடத்தப்படும். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பிரிவினைவாத அரசியலை பொதுமக்கள் மத்தியில் இந்த இயக்கம் அம்பலப் படுத்தும். குக்கி இனப் பெண்களை நிர்வாணமாக்கி பின்னர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அகில இந்திய விவசாயிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் விஜு கிருஷ்ணன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வர் தலைமை யிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் பதினைந்து நாட்கள் தில்லியில் தங்கியிருந்தும் மோடியுடனான சந்திப்பு அனுமதிக்கவில்லை என்று  சுட்டிக்காட்டியுள்ளனர்.

தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் குக்கி இன பெண்களை நிர்வாணமாக் கிய வன்முறையாளர்கள் அவர்களை ஊர்வலமாக கொண்டுசென்று பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி னர். இத்தகைய வன்செயல்களை தடுக்க முன்வராத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தீப்பந்தம் ஏந்தி  கேர ளத்தில் 3000 மையங்களில் சனியன்று டிஒய்எப்ஐ ஆர்ப்பாட் டம் நடத்தியது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

 

;