states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

41 ஆண்டுக்கு பிறகு அதிக மழை

41 ஆண்டுகளுக்கு பிறகு தில்லியில் ஜூலை மாதத்தில்  ஒரே நாளில் அதிக மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 1982 ஆம்  ஆண்டு ஜூலை 25க்கு பிறகு தில்லியில் ஞாயிறன்று ஒரே  நாளில் அதிகபட்சமாக 15செ.மீ. மழைப் பதிவு என இந்திய  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கேரள கனமழை: 19 பேர் பலி

கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து  வரும் கனமழையால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்  பட்டுள்ளனர். மழையின் தீவிரம் குறைந்ததாகத் தோன்றி னாலும், மாநிலத்தின் சில பகுதிகளில் இடைவிடாது மழை  பெய்ததால் போக்குவரத்து நெரிசல் மற்றும் தாழ்வான பகுதி களில் தண்ணீர் தேங்கியது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, சனிக்கிழமை மாலை வரை  மழை தொடர்பான சம்பவங்களில் மொத்தம் 19 பேர் உயிரி ழந்துள்ளனர்.

இமாச்சலில் 736 சாலைகள் மூடல்

இமாச்சலப்பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக  கடந்த 36 மணி நேரத்தில் 13 இடங்களில் நிலச்சரிவு களும், ஒன்பது இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்  பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்பட்டி 1,743 மின்மாற்றிகள் செயலிழந்தன. 138 நீர் வழங்கல் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 736 சாலைகள் மூடப்பட்டுள்ளன. ராவி,  பியாஸ், சட்லஜ், செனாப் உள்ளிட்ட அனைத்து முக்கிய  ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து  கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

ரணில் விக்ரமசிங்கே இந்தியா வருகிறார்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே இரண்டு நாள்  பயணமாக ஜூலை 21ஆம் தேதி இந்தியா வருகிறார்.  அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார்  எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடை பெற்ற இலங்கையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் விளைவாக கடந்தாண்டு கோத்தபய ராஜபக்சே பதவியில் இருந்து அகற்றப்பட்டார். தொடர்ந்து, விக்கிரமசிங்கே இலங்கை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். இந்தநிலை யில் அவர் முதன்முறையாக இந்தியா வருகிறார்.

தீவிபத்து: அதிகாரிகள் ஆய்வு

மேற்குவங்க மாநிலம் ஹவுராவிலிருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு வந்த ‘பலக்னுமா’ எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து ரயில்வே துறையின் 16 உட்பிரிவு துறையின் 40 அதி காரிகள் குழுவினர், ‘‘ரயில் பெட்டியில் உள்ள மின் ஒயர்களில்  ஏற்பட்ட பழுதால் தீ விபத்து ஏற்பட்டது. எஸ்-4 பெட்டியில்  ஏற்பட்ட தீ மற்ற பெட்டிகளுக்கும் பரவியது. மின் ஒயர்கள் பழு தடைந்ததால் விபத்து ஏற்பட்டது. அனைத்து ஆதாரங்களும் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கை வந்த பிறகே முழு விவரம் தெரியவரும்’’ என்றனர்.

ஏசி பெட்டிகளின் கட்டணம் குறைப்பு

ரயிலில் 50 சதவீதம் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள ஏசி பெட்டிகளுக்கு 25 சதவீதம் வரை டிக்கெட் கட்ட ணம் குறைக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. நாடு  முழுவதும் இதுவரை 24 மாநிலங்களில் 46 வந்தே பாரத்  ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில் சில ரயில்  களுக்கு போதிய வரவேற்பு இல்லை. எனவே வந்தே பாரத்  உட்பட ஏசி ரயில் பெட்டிகளின் டிக்கெட் கட்டணத்தை குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

‘மாநில கட்சிகளை பாஜக அழிக்கிறது’

“முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா  காந்தி, ராஜீவ் காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய்,  பி.வி.நரசிம்மராவ் ஆகியோர் எதிர்க்கட்சிகளைப்  பற்றி விமர்சனம் செய்வார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் மவு னமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் ஒருபோதும்  முயற்சிக்கவில்லை. மாநில அளவிலான கட்சிகளை அழிக்க  பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதை வெவ்வேறு  இடங்களில் செய்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு மக்களவை  தேர்தலில் பெரும்பான்மையை உறுதி செய்வதற்காக  மற்ற கட்சிகளை பிளவுபடுத்துவது பாஜகவுக்கு தெரியும்.  இது தேர்தல் ஜனநாயகத்திற்கு மிகவும் கேடு விளை விக்கும்’’ என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்  பவார் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் கனவை நொறுக்கிய ‘அக்னிபாதை’

இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை யாற்ற வேண்டும் எனக் கூறுவதை முன்பெல்லாம் வழக்கமாக வைத்திருந்தார்கள். இளைஞர்களின் இந்த தீர்மா னத்தால் அவர்களுக்கு சிறப்பான வசதிகள் மற்றும் வேலை  உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது. அக்னிபாதை திட்டத்  தின் அடிப்படையே தவறாக உள்ளது. இந்திய ராணுவத்தில்  இணைந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற இளை ஞர்களின் கனவை அக்னிபாதை சிதறடித்துள்ளது. இந்த அக்னிபாதை திட்டத்தினால் இளைஞர்கள் பலவிதமான அச்சங்களுக்கு ஆளாகியுள்ளனர். அதன் முடிவுகள் அனை வருக்கும் முன்பாக உள்ளது என காங்கிரஸ் பொதுச் செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

காரும், லாரியும் மோதல்: 6 பேர் பலி 

ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் காரும், லாரியும்  நேருக்குநேர் மோதி ஞாயிறன்று விபத்துக்குள்ளா னது. இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் பலியா னார்கள். மேலும் விபத்தில் படுகாயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. விஜயவாடாவைச் சேர்ந்தவர்கள் திருப்பதி கோயிலில்  சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் திரும்பும்போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

பேனா சின்னம்: இன்று விசாரணை

கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும். கடற்கரை யோரங்களில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை  விதிக்க வேண்டும், சென்னை மெரினா கடலில் பேனா சின்னம்  வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி மதுரையைச்  சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் உச்சநீதி மன்றம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இம்மனு திங்களன்று (ஜூலை 10) அன்று விசாரணைக்கு வரவுள்ளது.

‘மேகதாதுவில் அணை கட்ட முடியாது’ 

மேகதாது அணை தொடர்பான பிரச்சனையில், கர்நாடக அரசால் அணை கட்ட முடியாது. பில்லி குண்டு அணை வரையில் 80 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வருகிறது. இயற்கையாக வருகின்ற இடத்தில் தான் அணை காட்டுகிறோம் என்று சொல்வது உகந்தது அல்ல. மத்திய நீர் மேலாண்மை வாரியம், மாசுக் கட்டுப்பாட்டு துறை, வனத் துறை  அனுமதி கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தாலும், அதன் பிறகு  நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். எனவே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது என அமைச்சர் துரை முருகன் கூறியுள்ளார்.

முதல்வர் தலைமையில் ஆலோசனை 

மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சூழல் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 11  அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடை பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள் உள்பட அனைத்து உயர் காவல் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

மீனவர்கள் 15 பேர் கைது 

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற பெனிட்டோ லியோன் மற்றும் பாலா ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகள் ஞாயிறன்று அதிகாலையில் கட்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த  இலங்கை கடற்படையினர் படகில் இருந்த கிறிஸ்து, ஆரோக்கிய ராஜ், கெர்மாஸ், ஆரோக்கியம், ரமேஷ், ஜெகன், பிரபு, மெல்டன்,  பிரியன், ஈசாக், ஜான், பிரதீபன், அந்தோணி, சார்ஜ், ஜனகர் ஆகிய 15 மீனவர்களை சிறை பிடித்து காங்கேசன் துறைமுகம் அருகே உள்ள மயில்வெட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்ற னர்.

சின்ன வெங்காயம் ‘180’

இந்தியா முழுவதும் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டில் ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன  வெங்காயம் ஞாயிறன்று ஒரே நாளில் ரூ.30 அதிகரித்து மொத்த வியாபாரிகள் ரூ.180க்கும், சில்லறை வியாபாரிகள் ரூ.190க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி, சின்ன  வெங்காயத்தை தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும்  உயரும் என்பதால், காய்கறி வாங்குவோர் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.

பத்திர பதிவு கட்டணம்: இன்று அமல்!

பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வரும் ஆவண பதிவு,  பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண வீதங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படாமல் இருந்த  நிலையில் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன டிப்படையில் பதிவுச்சட்டம், 1908-இன் பிரிவு 78-இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும் சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரை கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இந்த உயர்வு ஜூலை 10 அன்று முதல் நடைமுறைக்கு வர உள்ள தாக வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்-மு.க.அழகிரிசந்திப்பு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின்மனைவி தயாளு அம்மாளுக்கு  90 வயதாகிறது. வயது முதிர்வு  காரணமாக கோபாலபுரம் வீட்டில்வசித்து வருகிறார். இதனால் அவரது குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பிறந்த  நாளை கொண்டாடினார்கள். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், அவரது மூத்த சகோதரர் மு.க.அழகிரி, இளைய சகோத ரர் மு.க.தமிழரசு, சகோதரி செல்வி, கனிமொழி உள்ளிட்டோர் குடும்பத்துடன் பங்கேற்றனர். இவர்களுடன் அமைச்சர் உதய நிதி, நடிகர் அருள்நிதி ஆகியோர் கலந்து கொண்டனர். முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இருவரும் கோபாலபுரம் வீட்டில் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

ஆருத்ரா இயக்குநர் கைது

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் 500 முகவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த முகவர்கள் 800 கோடி ரூபாய் வரை பொது மக்களிடம் வசூல் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. அவற்றை பறி முதல்  செய்யும் நடவடிக்கையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் மோசடி வழக்கில், தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் என்பவரை, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தற்போது கைதுசெய்துள்ளது.

 1021 மருத்துவர் காலிப்பணியிடங்கள் 

தேர்வுமூலம் 1,021 மருத்துவர் காலி பணியிடங்களை நேரடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பிற மாநிலங்களில் எம்.பி.பி.எஸ். படித்த தமிழ்நாடு மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னை,  ஜூலை 9- தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு ஓரிரு  இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.    மேற்கு திசை காற்றின் வேக மாறு பாடு காரணமாக, தமிழ்நாட்டில் ஆறு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ள்ளது. சென்னையை பொறுத்தவரை பொதுவாக மேகமூட்டத்துடன் காணப் படும். நகரின் ஒரு சிலபகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மித மான மழை பெய்யக்கூடும்.  வங்கக்கடல், தென்மேற்கு வங்கக் கடல்மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறா வளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர்வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர்வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் இப்பகுதி களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வணிகர் நல வாரியத்திற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் 

சென்னை,  ஜூலை 9- வணிகர் நல வாரியத்திற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்  செய்யப்பட் டுள்ளனர்.  வணிகர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு இன்னல்கள் நேரிடும் போது உதவி செய்வதற்கு பல்வேறு  நலத்திட்ட உதவிகளை வழங்குவ தற்காகவும் தமிழ்நாடு வணிகர்கள் நல வாரியம் 1989ஆம் ஆண்டு முதல் இயங்கி  வருகிறது. அதன் தலைவராக முதல் வரும், துணைத் தலைவராக வணிக வரித்துறை அமைச்சரும் செயல்பட்டு வந்தனர்.  இந்நிலையில், வணிகர் நல வாரி யத்தில் ஏற்கனவே இருந்த அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக் காலம் 2011 ஜூலை 21 ஆம் தேதியுடன் நிறை வடைந்தது.  இதையடுத்து புதிய உறுப்பி னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையைச் சேர்ந்த வி.பி.மணி, எ.எம்.சதக்கத்துல்லா, ஆர்.ஆர்.ஜெய ராம் மார்த்தாண்டன், மதுரையை சேர்ந்த எஸ்.ரத்தினவேலு, தூத்துக்குடி ரங்கநாதன், திருச்சி எம்.கண்ணன் உட்பட 30 பேர் அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக  தமிழக அரசு செய்திகுறிப்பு தெரிவிக்கிறது.

100 எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு

அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளினில் புதிதாக ஹோட்டல் கட்டுவதற்கான அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. அதில், ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய புதைகுழிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. கேப்பல் தெருவைச் சுற்றியுள்ள இப்பகுதி யில் மத்திய காலத்தைச் சேர்ந்த சுமார் 100 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில், இரண்டு எச்சங்கள் குறைந்தபட்சம் 11 ஆம் நூற்றாண்டின் முற்பகு தியைச் சார்ந்ததாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

தேவாலயத்திற்கு தீ வைப்பு

பிரான்ஸ் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ட்ரோஸ்னேயில் சமீபத்தில் வன்முறை வெடித்தது. இதில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவா லயம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. தேவாலயம் தீயில் எரியும் காணொளி கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. பாரீஸ் நகரில் இளம்பெண் ஒருவர் காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்டார். இதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களின் செயலாக இது இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

‘உக்ரைன் தயாராக இல்லை’

நேட்டோவில் உறுப்பினராக உக்ரைன் தயாராக  இல்லை என்று கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார். மேலும், “நேட்டோ வில் நுழைவதற்கான தகுதியை உக்ரைன்பெறுவதற்கு நாம் ஒரு பகுத்தறிவு பாதையை அமைக்கவேண்டும்” என்றும் கூறினார்.

மீண்டும் உலகப் போர்?

அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவ் கூறுகையில், “உக்ரை னுக்கு அணு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் இச்செயல் மனித குலத்தை ஒரு புதிய உலகப் போருக்கு கொண்டு செல்லும். ரஷ்யாவை தோற்கடிக்கும் எண்ணத்தில் இருப்பதால், தனது செயல்களின் தீவிரத்தை அமெரிக்கா உணரவில்லை” என்றார்.

500 நாட்கள் முடிந்தது

உக்ரைன் மீது ரஷ்யா போர்த்தொடுத்து 500 நாட்கள் முடிந்துவிட்டன. இந்த 500 ஆவது நாளைக் குறிக்கும் வகையில், உக்ரைனின் கருங்கட லில் உள்ள பாம்பு தீவுக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர்  ஜெலென்ஸ்கி சென்ற வீடியோவை வெளியாகியுள்ளது. முதலில் இந்த தீவு ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது; பின்னர் உக்ரைன் அதை மீட்டது. ‘உக்ரைன் நாட்டை அவர்களால் ஒருபோதும் கைப்பற்ற முடியாது’ என அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

ராட்சத தூசி மேகம்

சஹாரா பாலைவனத்தில் ஏற்பட்ட இந்த ராட்சத  தூசி மேகம், அட்லாண்டிக் பகுதியில் 5000 மைல் தொலைவை கடந்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த மேகம், தென்கிழக்கு அமெரிக்காவில் காற்றின் தரம் மற்றும் மழைப்பொழிவை பாதிக்கலாம். இது அடுத்த வாரம் டெக்சாஸை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது. இந்த தூசி மேகம் வண்ணமயமான சூரிய அஸ்தமனம் ஏற்படுத்தலாம்; கடலில் சூறாவளி உருவாவதைத் தடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

‘இந்தியாவுடன் வலுவான உறவு’

வங்கதேச வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஏ.கே.அப்துல் மொமன் கூறுகையில், “நாடு ஒரு சமநிலையான மற்றும் சுதந்திரமான வெளி யுறவுக் கொள்கையைப் பின்பற்றுகிறது; எந்த நாட்டிற்கும் நாங்கள் அடிபணியவில்லை; எங்கள் நாடு  சீனாவின் வால் அல்ல; நாங்கள் சீனாவை நோக்கி விரை கிறோம் என்று சிலர் நினைக்கிறார்கள்; ஆனால் நாங்கள் யாரை நோக்கியும் செல்லவில்லை. இந்தியாவுடனான எங்கள் உறவு மிகவும் பலம் வாய்ந்தது” என்றார்.

43 மில்லியன் டாலர் செலவு

கடந்த மூன்று ஆண்டுகளில் மெட்டா நிறுவனம் அதன் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க்கின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக 43 மில்லியன் டாலரை  செலவிட்டுள்ளது. அதே காலகட்டத்தில், ஜுக்கர்பெர்க்கின் குடும்பம் நடத்தும் அறக்கட்டளையான சான் ஜுக்கர்பெர்க்-இன்  PolicyLink-க்கு 3 மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. Policy Link என்பது DefundPolice.org-க்குப் பின்னால் உள்ள  அமைப்புகளில் ஒன்றாகும். இது காவல்துறை படை களைத் திரும்பப் பெறுவதையும், அதன் வலிமையை ஒழிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என நியூயார்க் போஸ்ட் செய்திகள் தெரிவிக்கின்றன.

சோகத்தை ஏற்படுத்திய தக்காளி

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா, தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், “மெக்டொனால்டு நிறுவனத்தாலும் இனி தக்காளியை வாங்க முடியாது“ என்று ட்வீட் செய்து ஒன்றிய அரசை  கிண்டலடித்துள்ளார். மெக்டொனால்டு, தனது வாடிக்கை யாளர்களுக்கு தக்காளி வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்துள்ள நோட்டீஸின் படத்தைப் பகிர்ந்த ராகவ் சத்தா, பணவீக்கம் கட்டுப்பாட்டை மீறிச்  செல்வதால், மகிழ்ச்சியான உணவை சோகமான உண வாக அரசாங்கம் மாற்றியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

அதானி போட்ட பாலம் திருட்டு

மும்பையில் உள்ள ஒரு வடிகால் மீது அதானி நிறுவனத்தின், பெரிய மின்சார கேபிள்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட 6,000 கிலோ  இரும்பு பாலம் கடந்த மாதம் திருடப்பட்டது. 90 அடி நீள முள்ள இந்த பாலம், கடந்த ஏப்ரல் மாதம் நிறுவப்பட்டது. ரூ.2 லட்சம் மதிப்பிலான இப்பாலத்தின் இரும்புகளை திருடியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடி தடுப்புச் சட்டத்தில் ஜிஎஸ்டி

அரசாங்கம் சரக்கு மற்றும் சேவை வரி வலையமைப்பை (GSTN) பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) 2002 இன் கீழ் கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்தின்கீழ் ஜிஎஸ்டி-ஐ சேர்ப்பது, அமலாக்க இயக்குநரகத்தின் (ED) தகவல் அல்லது நடவடிக்கைகளைப் பகிர்ந்து கொள்ள உதவும். இது தொடர்பான அறிவிப்பை ஜூலை 7 அன்று ஒன்றிய அரசு வெளியிட்டது.

ஆன்-லைன் கேமிங்க்கு  அதிக வரி கூடாதாம்!

ஆன்-லைன் விளையாட்டிற்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருப்பது துறையின் முன்னேற்றத்தைத் தடுக்கும் என்று ஆன்-லைன் விளையாட்டு (Online Gaming) நிறுவனங்கள் கூறி யுள்ளன. தற்போது, ஆன்-லைன் கேமிங்-க்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது; இது ஆன்-லைன் கேமிங் போர்டல்களால் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து விதிக்கப்படுகிறது. ஆனால் 28 சதவீத வரியை செலுத்தினால் நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்படும். எனவே, வரி விதிப்பை குறைக்க வேண்டுமென ஆன்-லைன் விளையாட்டு நிறுவனங்கள் கோரியுள்ளன. மேலும், ஜூலை 11 அன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரயில் புக்கிங் நிறுவனத்தைக் கைப்பற்றிய அதானி

அதானி எண்டர்பிரைசசின் துணை நிறுவனமான அதானி டிஜிட்டல் லேப்ஸ், ஆன்-லைன் ரயில் டிக்கெட் புக்கிங் பிளாட்ஃபார்ம் ட்ரெய்ன்மேன் வைத்திருக்கும் ஸ்டார்க் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் (SEPL) இன் 29.81 சதவீத பங்குகளை ரூ.3.56 கோடிக்கு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதானி எண்டர்பிரைஸ், இந்நிறுவனத்தை “இ-காமர்ஸ் மற்றும் இணையதள மேம்பாடு” எனக் கூறி, சமீபத்தில் அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து ஒரு மில்லியன் டாலர் திரட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

ரூ.1,117 கோடி பயிர்க் காப்பீடு 

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ரிது தினோத்ஸவம்’ (விவசாயி தினம்) கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, 2022 ஆம் ஆண்டு காரிஃப் பருவத்திற்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீடாக, மாநிலத்தில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.1,117 கோடியை வழங்கினார். இந்நிகழ்ச்சி அனந்தபுரமுவின் கல்யாண்துர்க்கில் நடை பெற்றது.

பிரம்மோஸ் விற்பனை :  ஆறு நாடுகளுடன் பேச்சு

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின் தலைமை பொது மேலாளர் பிரவீன் பதக், ஸ்புட்னிக் நியூஸிடம் கூறுகையில், “பிரம்மோஸ் நடுத்தர தூர சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை விற்பனை செய்வது குறித்து எங்கள் நிறுவனம் ஆறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் சில நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த  விற்பனையில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும் மத்திய கிழக்கு நாடு களைச் சேர்ந்தவர்கள் ஆர்வமாக உள்ளனர்” என்றார்.  

ரசாயன ஆயுதங்களை அழித்துவிட்டார்களாம்!

அமெரிக்கா தனது ரசாயன ஆயுதங்கள் அனைத்தையும் முழுமையாக அழித்து விட்டது என்று ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள் ளார். அதில், “அமெரிக்கா தன்னிடம் வைத்திருந்த இறுதி ஆயுதங்களையும் பாதுகாப்பாக அழித்துவிட்டது என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். ரசா யன ஆயுதங்களின் கொடூரங்கள் இல்லாத உல கத்திற்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம்”என்றார்.

கிரீமியா பாலத்தை தாக்க முயற்சி

ரஷ்யாவுடனான இணைப்பை துண்டிக்க கிரீமியா  பாலத்தை தாக்க உக்ரைன் படைகள் முயற்சித்தன.  எனினும் ரஷ்ய விமானப்படை பிரிவுகள் அதை வெற்றிகர மாக தடுத்து நிறுத்தி பாலத்தை பாதுகாத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


























 

;