உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு விரை வில் தேர்தல் வரவுள்ள நிலையில், கல்லூரி இறுதியாண்டு படிக்கும் ஒரு கோடி மாணவ - மாணவியர்க்கு இல வசமாக ஸ்மார்ட் போன், டேப்லெட் வழங்கப்படும் என்று ஆதித்ய நாத் தலைமையிலான அம்மாநில பாஜக அரசு சலுகை அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளன்றே (டிசம்பர் 25) இத்திட்டம் அமல்படுத்தப் படும் என்றும் கூறியுள்ளது. இறுதியாண்டு மாணவர்கள், 18 வயது நிறைவடைந்த வாக்காளர்கள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.