states

img

கடவுளின் உத்தரவுப்படியே பாஜகவில் சேர்ந்தாராம்!

புதுதில்லி, செப்.15- கோவாவில் கட்சித் தாவலில் ஈடு பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள், அதற்கான காரணங்களை விளக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களில் முக்கியமானவரான திகம்பர் காமத்,  கடவுள் உத்தரவுப்படியே பாஜக-வில் இணைந்ததாக காமெடி செய்  துள்ளார். உத்தரகண்ட் துவங்கி கர் நாடகா, கோவா, மத்தியப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களிலும் காங்  கிரஸ் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கித்தான் பாஜக ஆட்சிக்கு வந்  தது. இதனால், கடந்த ஆண்டு கோவா  வில் தேர்தல் நடந்தபோது, வேட்பா ளர்களை அவரவர் சார்ந்த வழி பாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் சென்ற காங்கிரஸ் கட்சி, தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏ-வானால் கட்சித் தாவ மாட்டோம் என்று சத்  தியம் வாங்கியது. எனினும், 40 இடங்களைக் கொண்ட கோவா மாநிலத்தில், 11 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. 20 இடங்களில் வென்ற பாஜக, சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. பிரமோந்த் சாவந்த் முதல்வரானார். ஆட்சி யைப் பிடிக்க முடியாவிட்டாலும், தங்கள் கட்சி எம்எல்ஏ-க்கள் கட்சி தாவாததே காங்கிரசுக்கு ஆறுத லாக அமைந்தது. ஆனால், இது ஓராண்டு மட்டுமே நீடித்தது.

முன்னாள் முதல்வர் திகம்பர்  காமத் தலைமையில், கோவா சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவர் மைக்  கேல் லோபா உட்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர், புதன்கிழமை யன்று திடீரென பாஜக-வைச் சேர்ந்த முதல்வர் பிரமோந்த் சாவந்தைச் சந்தித்தனர். அதன்பின்னர் காங் கிரஸ் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்திய அவர்கள், தாங்கள் பாஜக வில் இணைந்து விட்டதாக அறி வித்தனர். தெலிலா லோபோ, ராஜேஷ் பல்தேசாய், கேதர் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலெக்சோ செகீரா மற்றும் ருடால்ப் பெர்னாண்  டஸ் ஆகிய எம்எல்ஏ-க்களும் இந்தப்  ட்டியலில் அடங்குவர். இது காங்கி ரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைந்ததற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வந்த னர். தேர்தலின்போது, கட்சித்தாவ மாட்டோம் என்று கோயிலில் செய்து கொடுத்த சத்தியம் என்ன ஆனது? என்றும் சிலர் கேள்விகளை எழுப்பி  வந்தனர். இதற்கு கட்சித்தாவலை தலை மையேற்று நடத்திய முன்னாள் காங்கிரஸ் முதல்வர் திகம்பர் காமத் பதிலளித்துள்ளார். அதில், “நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன். சொல்லப்போனால் எனக்குக் கட வுள் நம்பிக்கை அதிகமாகவே உள்  ளது.

தேர்தலுக்கு முன்பு நாங்கள் கோயிலுக்குச் சென்று சத்தியம் செய்தது எல்லாம் உண்மைதான். ஆகவேதான் இப்போது மீண்டும் கோயிலுக்குச் சென்றேன். கடவுளி டம் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டேன். அவர்தான் உனக்கு எது  சரி எனப் படுகிறதோ அதைச் செய்ய லாம் என்று கூறினார். அதன் பின்  னரே இப்படிச் செய்தோம்”  என கூறி யுள்ளார். தங்களின் சுயநலமான பதவி ஆசைக்கான பழியை கடவுள்  மீது தூக்கிப் போட்டு, சத்தியம் எல்  லாம் எங்களுக்கு சர்க்கரைப் பொங்கல் என்று காட்டியுள்ளார். இதனை காங்கிரஸ் மூத்த தலை வர் தினேஷ் குண்டுராவ் விமர்சித்  துள்ளார். “இவர்களுக்கு அதிகாரம்  தான் அனைத்தும்.. கொள்கை இல்லாதவர்கள்” என்று சாடியுள் ளார். அத்துடன், “அடுத்த முறை யாருக்கு சீட் வழங்குகிறோம் என்ப தைப் பார்த்து முடிவு செய்ய வேண் டும்” எனவும் தமக்குத்தாமே கூறிக் கொண்டுள்ளார். கோவா சட்டப் பேரவையில் 11 ஆக இருந்த காங்கிரஸ் உறுப்பி னர்களின் பலம் தற்போது வெறும் 3 ஆக குறைந்துள்ளது.

;