states

img

சிபிஐ முன்னாள் இயக்குநர்  ரஞ்சித் சின்ஹா கொரோனாவால் உயிரிழப்பு 

புதுதில்லி:
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா  (வயது 68) வெள்ளியன்று காலமானார். 

1974 ஆம் ஆண்டு பிஹார்கேடர் ஐபிஎஸ் அதிகாரி யான ரஞ்சித் சின்ஹா தனதுபதவிக் காலத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகளை விசாரித்துள்ளார்.இந்தோ-திபெத்தியன் படை, ரயில்வே பாதுகாப்புப் படை ஆகியவற்றின் தலைவராகவும் ரஞ்சித் சின்ஹா பணியாற்றினார். பாட்னா வில் சிபிஐ அமைப்பின் மூத்தஅதிகாரியாகப் பணியாற்றி னார். 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசில் சிபிஐ இயக்குநராக ரஞ்சித் சின்ஹா நியமிக்கப்பட்டார். தனியார் நிறுவனங் களுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு குறித்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் ரஞ்சித்சின்ஹா  மீது 2017-ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.