states

அந்நிய செலாவணி கையிருப்பும் சரிந்தது

புதுதில்லி, அக். 25 - அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு மோசமாக சரிவடைந்ததைத் தொடர்ந்து, முந்தைய இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, நடப்பாண்டில் அந்நிய செலாவணி கையிருப்பு விகிதம் குறைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கான இணையான இந்திய ரூபாய் மதிப்பு, இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த அக்டோபர் 19 அன்று முதல்முறையாக 83 ரூபாயைத் தாண்டி சரிந்தது. குறிப்பாக, நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் இந்திய ரூபாய் மதிப்பு 5.4 சதவிகிதம் சரிந்துள்ளது. இந்த 6 மாதங்களில், இந்தியாவின் சில்ல ரைப் பணவீக்கம் 7.2 சதவிகிதமாக இருந்தது. இது 8 சத விகிதம் என்ற உலக பணவீக்கத்தைவிட குறைவு என்றாலும், இதே காலகட்டத்தில் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 5.4 சதவிகிதம் சரிந்தது. இவற்றின் காரணமாக, இந்தியாவின் அந்நிய செலா வணி கையிருப்பும் அக்டோபர் 14-ஆம் தேதியுடன் முடி வடைந்த வாரத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத  வகையில் 528.367 பில்லியன் (52,837 கோடி) அமெரிக்க டாலர்களாகக் குறைந்துள்ளது.  கடந்த அக்டோபர் 7-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 20.4 கோடி டாலர் அதிகரித்து 53 ஆயிரத்து 286 கோடியே 80 லட்சம் டாலராக இருந்தது. இது கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி யுடன் முடிவடைந்த வாரத்தில் 450 கோடி டாலர்கள் சரிந்து 52 ஆயிரத்து 837 கோடி டாலர்களாக குறைந்துள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமார் 43 லட்சத்து 61 ஆயிரத்து 245 கோடியே 24 லட்சம் ஆகும்.