புதுதில்லி, டிச.4- இந்தியாவில் கிரெடிட் கார்டு மூல மான வர்த்தகம் 2021 அக்டோபரில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரூ. 1 லட்சம் கோடி அளவிற்கு நடை பெற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ஏராளமானோர் தங்களது கிரெடிட் கார்டு மூலம் பொருள்கள், ஆடைகள் போன்ற வற்றை வாங்கியதால், கிரெடிட் கார்டு மூலம் அக்டோபரில் மட்டும் ரூ. 1 லட்சத்து 943 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
முந்தைய செப்டம்பர் மாதத்தில், கிரெடிட் கார்டு மூலமான வர்த்தகம் ரூ.80 ஆயிரத்து 228 கோடி அள விற்கே இருந்த நிலையில், அது 2021 அக்டோபரில் 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல மாத சராசரி செலவின மும், அக்டோபர் மாதத்தில் 49 சதவிகி தம் அதிகரித்துள்ளது. இது கடந்த 6 மாதத்தில் இல்லாத உயர்வு என்று கூறப்படுகிறது. டெபிட் கார்டை (ரொக்க அட்டையை) விடவும், கிரெடிட் கார்டு (கடன் அட்டை) மூலமான செலவின முறை அதிக ரித்துள்ளது.
டெபிட் கார்டு மூலமான செல வினங்கள் தற்போது யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படுவதால், இந்த விகி தாச்சார மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று இதற்கு காரணம் கூறப்படுகிறது. எனினும் அக்டோபர் மாதத்தில் தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகள் வந்ததும், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ஏராளமான இ-காமர்ஸ் நிறுவனங்கள், பல்வேறு சலுகை களை அறிவித்திருந்ததும், தவணை முறையில் பொருட்களை வாங்குவதை கிரெடிட் கார்டுகள் எளிமையாக்குவ துமே கிரெடிட் கார்டு மூலமான வர்த்த கம் அதிகரித்ததற்கு முக்கியக் காரண மாக கூறப்படுகிறது. கொரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு, பொருளாதார அடிப்படையில் பார்க்கும்போது, செலவினத்தின் மீது மிகப்பெரிய மீட்சி இது என்றாலும், கிரெடிட் கார்டு மூல மான வர்த்தகத்தால், 2021 அக்டோப ரில் மட்டும் இந்தியர்கள் ரூ. 1 லட்சம் கோடி அளவிற்கு புதிய கடனாளியாகி இருக்கிறார்கள் என்பதுதான் இங்கு குறிப்பிட வேண்டிய உண்மையாகும்.