states

img

இந்தியாவில் கொரோனா தொற்று சோதனைகள் 13.5 கோடியை நெருங்குகிறது 

இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு எடுக்கப்பட்ட மொத்த சோதனைகள் 13.5 கோடியை நெருங்குகிறது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,59,032 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் 13.5 கோடி (13,48,41,307) நெருங்குகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், ஜனவரி 2020 முதல் இந்தியா கொரோனா சோதனை உள்கட்டமைப்புகளை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக சோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. படிப்படியாக கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருகிறது. அதே போல குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று விகிதம் 3.83 சதவிகிதமாக உள்ளது. 167 அரசு ஆய்வகங்கள் மற்றும் 971 தனியார் ஆய்வகங்கள் உட்பட நாட்டில் 2,138 சோதனை ஆய்வகங்களுடன் தினசரி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் அளவிற்கு சோதனை நடத்தப்படுகிறது.

இந்தியாவின் தற்போதைய செயலில் உள்ள கொரோனா தொற்றுகள் 4,44,746 ஆகா உள்ளது. இது 4.82 சதவிகிதமாகும். மேலும் இது 5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது. மீட்பு விகிதம் 93 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது. தற்போது கொரோனாவில் இருந்து 5,149 நபர்கள் மீண்டு வரும் நிலையில், கேரளா முதலிடத்தில் உள்ளது. டெல்லி 4,943 குணமடைந்தவர்களாகவும், மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,086 புதிய குணமடைந்தவர்கள் என பதிவு செய்துள்ளது.

புதிய தொற்றுகள் 76.51 சதவிகிதத்தை பத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் பங்களித்துள்ளன. டெல்லி கடந்த 24 மணி நேரத்தில் 6,224 தொற்றுகள் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் 5,439 புதிய தொற்றுகளும், கேரளாவில் தினமும் 5,420 தொற்றுகளும் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான 481 வழக்குகளில் மொத்தம் 74.22 சதவிகிதம் பத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ளது. 109 இறப்புகளுடன் டெல்லியில் அதிகபட்சமாக புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், மேற்கு வங்கத்தில் 49 பேர் உயிரிழந்தனர். உத்திரபிரதேசம் 33 பேர் உயிரிழந்தனர்.