புதுதில்லி, டிச.4- இஸ்லாமியர்களைக் குறி வைத்து, ஒன்றிய பாஜக அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தம் சட்டமே அடிப்படை யில் தேச விரோதமானது, என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் குற் றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சசி தரூர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித் துள்ள பேட்டியில் மேலும் கூறி யிருப்பதாவது: “சிஏஏ கொண்டு வரப்பட்ட போது, நான் நாடாளுமன்றத் தில் பேசினேன். ‘’எந்தவொரு சமூகத்தையும் குறிவைத்து இயற்றப்படும் எந்த சட்டமும் அடிப்படையில் தேச விரோத மானது’’ என்று உள்துறை அமைச்சரிடம், எனது ஆட்சேப ணையைத் தெரிவித்தேன்.
சிஏஏ சட்டங்களுக்கான விதி முறைகளை மோடி அரசு இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை வரையறுக்காமல் இருப்பதை, அல்லது சட்டத்தை செயல் படுத்தாமல் இருப்பதை நான் வரவேற்கிறேன். இனிமேலும் ஒன்றிய அரசு இந்த சட்டம் குறித்த பணிகளை தொடரக் கூடாது எனக் கேட்டுக்கொள்கி றேன். முட்டாள்தனமாக எதையும் செய்வதற்கு முன் அவர்கள் கடினமாக யோசிப்பார்கள். அதற்கு நீண்டகாலம் எடுத்துக் கொள்வார்கள் என்றுதான் கருதுகிறேன். தேவையில்லா மல் நாட்டை பிளவுபடுத்தவோ, நாட்டின் சமூக நல்லிணக்கத் திற்கு பொறுப்பற்ற முறையில் ஆபத்தை ஏற்படுத்தவோ வேண்டாம் என்று நான் அரசாங் கத்தை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு சசி தரூர் கூறி யுள்ளார்.