states

img

பல்லாயிரக்கணக்கில் திரண்ட பொதுமக்கள்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநி லத்தில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 6ஆம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் மாநிலம் முழுவதும் களைகட்டி யுள்ளது. மாநிலம் முழுவதும் “இந்தியா” கூட்டணிக்கான ஆதரவு வலுத்து வரும் சூழலில், ஞாயிறன்று புல்பூர் நாடாளு மன்றத் தொகுதியில் வாக்குச் சேகரிக்க காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி தலைவர்கள் படிலாவில் அமைக்கப்பட்ட மைதானத்தில் சங்க மித்தனர். இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி “இந்தியா” கூட்டணிக்கு ஆதரவாகவும், பாஜகவிற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். மேலும் உற்சாக மிகுதியில் இளைஞர்கள் ராகுல் மற்றும் அகிலேஷுக்கு கைகொடுக்க மேடை அருகே முண்டியடித்தனர். மேடையின் உயரம் மிக தாழ்வாக இருந்ததால், இளைஞர்கள் சிலர் மேடையில் ஏற முயன்றனர்.  பாஜக அதிர்ச்சி இளைஞர்களின் ஆரவாரத்தால் மேடை பாதுகாப்பு இடைவெளிப்பகுதி தகர்க்கப் பட்டது. போலீசார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் கடுமையாக போராடியும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. கூட்ட நெரிசலால் ஏற்படும் அசம்பாவிதங்க ளை தடுக்கும் முனைப்பில் ராகுல் மற்றும் அகிலேஷ் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி தலைவர்கள் பிரச்சாரத்தை ரத்து செய்து அங்கிருந்து திரும்பினர். மக்களின் ஆதரவு அலையால் “இந்தியா” கூட்டணியின்  பிரச்சாரமே ரத்து செய்யப்பட்டுள்ள விவகா ரம் பாஜகவிற்கு கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

;