states

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் விலைவாசி தொடர்ந்து அதிகரிப்பு

புதுதில்லி, செப்.17- உலகை பொருளாதார மந்த நிலை அபாயம் சூழ்ந்துள்ளதாக உலக வங்கி (World Bank) எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய வங்கிகளின் வட்டி விகித அதிகரிப்பு மட்டுமே பணவீக்கப் பிரச்சனைக்கு தீர்வாக அமைந்து விடாது; விநியோகத்தை அதிகரிக்க வும், விலைவாசி உயர்வைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் உலக வங்கி வலியுறுத்தியுள்ளது. பணவீக்கப் பிரச்சனையானது, உலகளா விய பிரச்சனையாக மாறியுள்ளது. இது கடந்த பல பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுப் பாதிப்பிலிருந்து  உலக நாடுகள் மீண்டு வரும் வேளையில் சந்தையில் அதிகப்படியான தேவை உருவானது.

ஆனால், ஆனால் உக்ரைன் -  ரஷ்யா இடை யிலான யுத்தம் மற்றும் கொரோனா காரணமாக சீனாவில் கடைப்பிடிக்கப்பட்ட பொதுமுடக்கம் ஆகியவற்றால், நடப்பாண்டில் விநியோகம் கடு மையாக பாதிக்கப்பட்டு, பணவீக்கம் அதிகரித் தது. இது பொருளாதார வளர்ச்சியிலும் தற்போது எதிரொலித்து வருகிறது. இதனிடையே பணவீக்கத்தைக் கட்டுப் படுத்த கடந்த 3 மாதத்தில் அமெரிக்கா, பிரிட்டன்,  இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தின. செப்டம் பர் மாத இறுதியிலும் அமெரிக்கா மற்றும் இந்தி யாவிலுள்ள மத்திய வங்கிகள், தங்களின் நாணய கொள்கைக்குழு கூட்டத்தில் வட்டியை உயர்த்த திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், உலக வங்கியின் பொரு ளாதார வல்லுநர்கள் தங்களின் புதிய ஆய்வ றிக்கையில், விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வர இதுவரையில் உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளனர். கடந்த 45 நாட்களாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும், உலக நாடுகளில் விலைவாசி குறையாமல் பணவீக்கம் அதிகரித்து வருவதை உதாரணம் காட்டும் அவர்கள், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகித உயர்வு அவசியமானதாக மாறுகிறது என்று தெரி வித்துள்ளனர்.

மேலும், வட்டி விகித உயர்வால் அனைத்து கடன்களுக்குமான வட்டி விகிதம் உயரும். இதனால் மக்கள் கூடுதலான பணத்தை இஎம்ஐ-யாகச் செலுத்துவது மட்டும் அல்லா மல் நிறுவனங்களும் கூடுதலான தொகையை வட்டியைச் செலுத்தும் நிலை உருவாகிறது. இது லாப அளவுகளில் பாதிப்பு ஏற்படுத்துவதுடன், வர்த்தக விரிவாக்கத்திற்கான முதலீடுகள் அள விலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவை இரண்டும் நடந்தாலே ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி குறையும். இதனை உணர்ந்தே பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை அவசர அவசரமாக விற்பனை செய்கிறார்கள். இது சர்வதேச சந்தையில் நிச்சயமற்ற தன்மை யை ஏற்படுத்துகின்றன என்றும் பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். அண்மையில் வெளியான ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ (Fitch Ratings) வளர்ச்சிக் கணிப்பும், 2022-23 நிதியாண்டிற்கு உலக நாடுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை குறைத்தது. உலக நாடு களில் வளர்ச்சி 2.90 சதவிகிதம் அளவிற்கு இருக்கும் என்று வெளியிட்டிருந்த கணிப்பை 2.40 ஆக மாற்றியமைத்தது. அதுமட்டுமல்லாமல், சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் உலக நாடுகள் பலவும் 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளலாம்; இதில் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மோசமான தாக்கத்தை எதிர்கொள்ளலாம் என்று கூறியது. ஆசியாவின் பொருளாதாரம் தொடர்பாக கணிப்பு வெளியிட்டிருந்த ‘மூடிஸ்’ (Moody’s) நிறுவனமும்,  வளர்ந்து வரும் ஆசிய பொருளா தாரங்களுக்கு அடுத்த 12 முதல் 18 மாதங்களில் பணவீக்கமும், விநியோக சிக்கல்களும் மிகப்பெரிய ஆபத்துகளாக இருக்கும் என்பதை தெரிவித்திருந்தது.

பணவீக்கம், விநியோக சிக்கல்களுக்கு அடுத்தபடியாக வட்டி விகித உயர்வு, பொருளா தார வளர்ச்சி வேகம் குறைவு ஆகியவை முக்கியப் பிரச்சனைகளாக இருக்கும் என ‘மூடிஸ்’ தெரிவித்திருந்தது. அத்துடன், 2022-23 நிதியாண்டில், இந்தி யாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பை (GDP) அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’  7.8 சத விகிதத்திலிருந்து  7 சதவிகிதமாகவும், மூடிஸ், 5.4 சதவிகிதத்திலிருந்து 5.2 சதவிகிதமாக குறைத்தன. இந்த பின்னணியிலேயே உலக வங்கியும், தற்போது உலக நாடுகளை எச்சரிக்கை செய்துள் ளது. உலகளவில் அதிகரித்து வரும் பணவீக்க விகிதங்களைக் குறைக்க, அமெரிக்காவின் பெடரல் வங்கி, இந்தியாவின் ரிசர்வ் வங்கி உட்பட உலகின் அனைத்து மத்திய வங்கிகளும் கவனம் செலுத்துவதால் உலகளாவிய மந்த நிலையின் (Recession) அச்சுறுத்தல் அதிக ரித்து வருகிறது என்று உலக வங்கி தெரிவித்துள் ளது. விலை உயர்வுக்குக் காரணமான பிரச்ச னைகளைக் கண்டறிந்து, அந்த பிரச்சனை களை சரிசெய்ய வேண்டும். விநியோகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

;