காங்கிரஸ் கட்சி யின் கோவா மாநில செயல் தலைவர் அலெக்சிகோ ரெஜி னால்டோ லூரென்கோ தனது எம்எல்ஏ பதவி யை ராஜினாமா செய் துள்ளார். இதன்மூலம் 40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் பலம் 2 ஆக குறைந்து விட்டது. 2017 தேர்தலில் கோவாவில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், அந்த கட்சியின் எம்எல்ஏ-க்களை பாஜக கொஞ்சம் கொஞ்சமாக தன்பக்கம் இழுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.