ரூ.33 ஆயிரம் கோடியில் அமெரிக்காவிடமிருந்து 31 நவீன டிரோன்களை வாங்க ஒப்பந்தம்
இந்தியாவின் போர் வலிமையை அதிகரிக்கும் வகையில், அமெரிக்காவிடம் இருந்து எம்க்யூ-9பி பிரிடேட்டர் டிரோன்களை வாங்க பாது காப்பு அமைச்சகம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஒப்புதல் அளித்தது. இதற்கு கடந்த வாரம் ஒன்றிய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து, ரூ.33 ஆயிரம் கோடி செலவில் அமெரிக் காவிடம் இருந்து 31 பிரிடேட்டர் ரக டிரோன்களை வாங்குவதற்கான ஒப்ப ந்தம் செவ்வாயன்று கையெழுத்தானது. அமெரிக்காவின் அட்டாமிக்ஸ் நிறு வனம் டிரோன்களை தயாரித்து வழங்கு கிறது. மொத்தம் 31 டிரோன்களில் கடற் படைக்கு 15 கடல் பாதுகாப்பு டிரோன் களும், இந்திய விமானப்படை, தரைப் படைக்கு தலா 8 வான் பாதுகாப்பு டிரோன் களும் வழங்கப்படும். இந்த டிரோன்கள் வானில் மிக உயரத்தில் 35 மணி நேரத்துக் கும் அதிகமாக பறக்கக் கூடியது என்றும் மேலும் 450 கிராம் வெடிகுண்டுகள் ஆகியவற்றையும் எடுத்துச் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ.வி.எம்., சர்ச்சைக்கு தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்
ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில் சில இடங் களில் ஓட்டு எண்ணிக்கையின் போது, வெவ்வேறு பேட்டரி சார்ஜ் அளவு இருந்த ஓட்டு இயந்திரங்கள், வெவ்வேறு முடிவு களை காட்டியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் செவ்வாயன்று விளக்கம் அளித்தார். ஓட்டு இயந்திரங்களில் ஒரு முறை பயன்படுத்தும் பேட்டரியே உபயோகிக் கப்படுகிறது. அதற்கு என்று விதிகள் வகுக்கப்பட்டு உள்ளன. ஓட்டு இயந்தி ரத்தை பயன்படுத்தும் நாளில் தான், 99 சதவீத அளவு சார்ஜ் உள்ள பேட்டரி களை பொருத்துவோம். வோல்டேஜ் கார ணமாக அதில் வித்தியாசங்கள் ஏற்பட லாம். அனைத்து கட்சியின் முகவர்கள் முன்னிலையில் தான் பேட்டரியை பொருத்தி ஓட்டு இயந்திரத்தை சீல் வைப் போம். அதை அவர்கள் உறுதி செய்து கையொப்பம் இட்டுள்ளனர். இதுபோன்ற புகார்களுக்கு எத்தனை முறை தான் நாங்கள் விளக்கம் அளிப்பது என தெரிய வில்லை என்று அவர் தெரிவித்தார்.
ரயிலில் தவறி விழுந்த பெண் குழந்தை : 16கி.மீ. தேடி மீட்ட காவல்துறை
உத்தரப்பிரதேச மாநிலத்தின் லலித்பூர் ரயில் பாதையில் பயணித்தபோது 8 வயது பெண் குழந்தை எமர்ஜென்சி ஜன்னல் வழியாக தவறி கீழே விழுந்துவிட்டது. இதையடுத்து அக்குழந்தையின் தந்தை உடனடியாக ரயில்வே காவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு உள்ளூர் காவ லர்கள் உதவியுடன் தண்டவாளத்தின் வழியே சுமார் 16 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று பெண் குழந்தையைத் தேடி மீட்டுள்ளனர். இதற்காக அத்தடத்தில் ரயில்களும் நிறுத்தத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தையை மீட்ட காவலர்களுக்கு பாராட்டுக்கள் தெரி விக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்: காங்கிரஸ் பார்வையாளர்கள் நியமனம்
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் பேரவை தேர்தல்களுக்கான காங்கிரஸ் பார்வையாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “மகாராஷ்டிரா மாநில தேர்தல் மூத்த ஒருங்கிணைப் பாளர்களாக முகுல் வாஸ்னிக், அவி னாஷ் பாண்டே ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். மும்பை மற்றும் கொங்கன் பகுதிக்கு அசோக் கெலாட், பரமேஷ்வரா, மராத்வாடாவுக்கு சச்சின் பைலட், உத்தம் குமார் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். விதர்பா(அமராவதி மற்றும் நாக்பூர்) பகுதிக்கு பூபேஷ் பாகேல், சரஞ்சித் சிங் சன்னி, உமாங் சிங், வடக்கு மகாராஷ்டிராவின் மூத்த பார்வை யாளர்களாக சையத் நசீர் ஹூசைன், டி.அனசுயா சீதக்கா ஆகியோரும், மேற்கு மகாராஷ்டிராவுக்கு டி.எஸ்.சிங்தியோ, எம்.பி.பாட்டீல் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் பேரவை தேர்தலுக்கான மூத்த பார்வையாளர்களாக தாரிக் அன்வர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பாட்டி விக்ரமார்கா மல்லு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி: தைவான் நாட்டினர் 4 பேர் உட்பட 17 பேர் கைது
ஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ஈடுபட்டு வந்த 17 பேரை குஜராத் காவல்துறையினர் கைது செய்துள்ள னர். இவர்களில் 4 பேர் தைவான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மருத்துவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களைக் குறிவைத்து டிஜிட்டல்அரெஸ்ட் மோசடி மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஈடுபடுபவர்கள், தங்களை விசாரணை அதிகாரிகள் என கூறி சம்பந்தப்பட்ட தனி நபருக்கு வீடியோ கால் செய்து, அவர் களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ள தாக தெரிவிப்பார்கள். பண மோசடி, போதைப் பொருள் கடத்தல் போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட்டுள்ள தாகவும், தாங்கள்சொல்வதற்கு ஒத்து ழைக்காவிட்டால் சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் மிரட்டு வர். பின்னர், குறிப்பிட்ட தொகையை தந்தால் இந்தப் பிரச்சனையிலிருந்து தப்பிக்க உதவுவதாகக் கூறி, பணத்தை பறித்து விடுவர். தற்போது இத்தகைய டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி அதிகரித்து வருகிற நிலையில், குஜராத் காவல்துறை, இது தொடர்பான சோதனையில் இறங்கியது. இதையடுத்து 17 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் தைவான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மீதமுள்ள 13 பேர் குஜராத், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஒடிசா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள் ளனர்.