48 மணிநேர இடைவிடாத மழையால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மாநில தலைநகர் அகர்தலா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், 5,600 குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பொதுமக்களை மீட்கும் பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.