states

img

திரிபுராவில் பழங்குடியின சிறுமிகளுக்கு சிபிஎம் ஆறுதல்

பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தில் உள்ள போத்ஜங் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மகாராணி துளசிபதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகள் வயிறு மற்றும் நெஞ்சுவலியால் அகர்தலாவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ சோதனையில் விஷம் கலந்த உணவை உட்கொண்டதால் மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில், வெள்ளியன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜிதேந்திர சவுத்ரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழங்குடியின மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.