states

போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுக!

சென்னை, மே 19- தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன மாநில நிர்வாகிகள் கூட்டம் மே 16 அன்று  சம்மேளன தலைவர் அ. சவுந்தர ராசன் தலைமையில் நடைபெற்  றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பட்ஜெட்டில் நிதி ஒதுக்குக! தமிழக அரசு போக்குவரத்து கழ கங்கள் தமிழக மக்களுக்கு போக்கு வரத்து சேவையை அளிக்கும் மிகச்  சிறந்த பொதுத்துறை நிறுவனமா கும்.  எவ்வித லாப நோக்கமின்றி சேவை நோக்கத்தோடு 10,000க்கும்  மேற்பட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வரு கின்றது.  போக்குவரத்து கழகங்கள்  சேவைத்துறையாக செயல்படுவ தால் கடும் இழப்பை சந்திக்கின்றன.   இதன் காரணமாக உரிய காலத்  தில் புதிய பேருந்துகள் மாற்றப்படு வதில்லை.  போக்குவரத்து கழகங்  கள் இன்னும் அதிகமான வழித் தடங்களில் பேருந்துகளை இயக்கி மக்களுக்கு தடையில்லா பேருந்து  சேவையை வழங்க போதுமான நிதி யின்றி சிரமப்படும் சூழ்நிலை உள்  ளது.  மறுபுறத்தில், ஊழியர்கள் நலன்  களும் பாதிக்கப்பட்டுள்ளது.  எனவே, போக்குவரத்துக் கழகங்க ளின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்  ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசு வழங்க வேண்டும்.  போக்குவரத்து கழ கங்களின் நிதிப்பற்றாக்குறையை கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஈடு செய்வது என அரசாணை வெளி யிடப்பட்டு அதற்கான பரிந்துரை களும் அரசுக்கு அனுப்பப்பட்டுள் ளது.  ஆனால், இதுவரை உரிய நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, போக்கு  வரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத்தை அரசு உடனடியாக வழங்க வேண்  டும்.

வெறுங்கையோடு அனுப்பாதீர்!

போக்குவரத்து கழகங்களில் பணிபுரியக்கூடிய போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தங்களது பணிக்காலத்தில் சேமித்த வருங்  கால வைப்புநிதி உள்ளிட்ட தொகை கள் சுமார் ரூ.15,000 கோடி போக்கு வரத்து கழக நிர்வாகங்களால் செலவு  செய்யப்பட்டுவிட்டது.  இதன் கார ணமாக பணி ஓய்வின்போது தொழி லாளர்கள் வெறும் கையோடு வீட்  டுக்கு அனுப்பப்படுகின்றனர்.  கடந்த 2022 டிசம்பர் மாதத்திலி ருந்து பணி ஓய்வுபெற்ற ஊழியர் களுக்கு பணிக்கால பலன்கள் வழங்கப்படவில்லை.  சுமார் 18  மாதங்களாக 6000க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் ஓய்வுபெற்றுள்ள னர்.  எனவே, ஓய்வுபெற்ற ஊழியர்  களது பணிக்கால பலன்களை உட னடியாக வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு கடந்த 102 மாதங்களாக அக விலைப்படி உயர்வு மறுக்கப்பட்  டுள்ளது.  ஒப்பந்த அடிப்படையில்  ஓய்வூதியம் உயர்த்தப்பட வில்லை.  குறைந்தபட்ச ஓய்வூதிய மும் உயர்த்தப்படவில்லை.  இந்  நிலையில், 90,000 ஓய்வுபெற்ற ஊழி யர்கள் கடும் இன்னலுக்கு உள்  ளாகியுள்ளனர்.  ஓய்வுபெற்ற ஊழி யர்களுக்கு மருத்துவக் காப்பீடும், மற்ற துறை ஊழியர்களைப்போல் வழங்கப்படவில்லை.  எனவே, ஓய்  வூதியர்களின் அனைத்துப் பிரச்ச னைகளுக்கும் உடனடி தீர்வுகாண அரசு நடவடிக்கை எடுக்க வேண்  டும். அகவிலைப்படி உயர்வை உட னடியாக வழங்க வேண்டும்.

பழைய ஓய்வூதியம்

1.4.2003க்குப்பின் பணிக்கு சேர்ந்த தொழிலாளர்களுக்கு புதிய  ஓய்வூதிய திட்டம் என அரசு கூறி  வருகிறது.  இப்புதிய ஓய்வூதிய  திட்டத்தைக் கைவிட்டு அனை வருக்கும் பழைய ஓய்வூதிய திட் டத்தை அமுல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்கள் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர், டெக்னிக்கல், அலுவலகம் என அனைத்துப் பிரிவு களிலும் 25,000க்கும் மேற்பட்ட காலிப்  பணியிடங்கள் உள்ளன.  அன்றாட  பேருந்து சேவையில் பெறும் சிர மம் ஏற்படுத்துவதுடன், தொழிலா ளர்களும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.  எனவே, உடனடியாக காலிப்பணியிடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

வாரிசு வேலை

போக்குவரத்து கழகங்களில் கடந்த பல ஆண்டுகளாக வாரிசு  வேலை முறையாக வழங்கப்பட வில்லை.  5,000க்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் பதிவுசெய்து காத்தி ருக்கின்றனர். எனவே, அனை வருக்கும் வாரிசு வேலை வழங்கப்  பட வேண்டும்.

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை

ஊதிய ஒப்பந்தம் நிறைவு பெற்று 9 மாத காலம் முடிந்து விட்டது.  எனவே, ஊதிய ஒப்பந்த  பேச்சுவார்த்தையைத் துவக்க வேண்டும்.   போக்குவரத்துக் கழகங்க ளில் காண்ட்ராக்ட் முறையில் பணி யாளர்களை நியமனம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  காண்ட்ராக்ட் முறை நவீன கொத்தடிமை முறையாகும்.  சமூக நீதிக்கு எதிரானதாகும்.  எனவே, காண்ட்ராக்ட் முறையில் நியமனம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேற்கண்ட கோரிக்கைகளை தொழிலாளர்கள் மத்தியில் விளக்கி சொல்லும் அடிப்படையில், ஜுன்  10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி  முடிய வாயிற்கூட்டங்கள் நடத்து வது, ஜூன் 24ஆம் தேதி காலை 10  மணிக்கு துவங்கி, 25ஆம் தேதி  காலை 10 மணி வரை 24 மணி  நேரம் உண்ணாவிரதம் மேற்கொள் வது என சம்மேளனக் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இம்முடிவுகளை வெற்றிகரமாக்க  அனைத்து தொழிலாளர்களும் பேராதரவு தர வேண்டுமென தமிழ்  நாடு அரசு போக்குவரத்து ஊழியர்  சம்மேளனம் கேட்டுக் கொண்டுள் ளது.

 

;